தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலையை அரசிய லாக்க தி.மு.க. விரும்ப வில்லை என்று அண்ணா அறிவாலயத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் எதிர் கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 22 ந் தேதி முதல் அப்பல்லோ மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவ நிர்வாகம் சார்பில் வெளியிடப் பட்ட அறிக்கை யில், முதல்வர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் நீண்ட நாட்கள் அவர் மருத்துவ மனையில் தங்கியிருக்க வேண்டும் என அறிவுறித்தினர். இதனால் முதல்வர் குறித்து பல்வேறு வதந்திகளும் ரெக்கை கட்டி பறந்தன.
இந்நிலையில், பல்வேறு கட்சிகளில் இருந்து பல ஆயிரக்கணக் கானோர் தி.மு.க.வில் இணையும் விழா அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடை பெற்றது.
அப்போது அவர் பேசியதாவது:
முதலமைச்சர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் இருப்பதை அரசியலாக்கி நான் பேசுவதாக யாரும் கருதி விடக்கூடாது, இன்றைக்கு உள்ள சூழலை நான் சொல் லவில்லை,
உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்வதற்கு முன்னால் இருந்த நிலையை சொல்கிறேன், அன்றைய நிலையை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே 5 வருடம் அவர்கள் தான் தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்தார்கள். அப்படி ஆட்சியில் இருந்த போது இந்த தமிழ் நாட்டு மக்களுக்கு நன்மை எதையாவது செய்திருக் கிறார்களா?
தமிழகத்தில் ஏதாவது வளர்ச்சி ஏற்ப ட்டுள்ளதா? அவர்கள் வெற்றி பெற்று இருக்கலாம். வெற்றி, தோல்வி என்பது அரசியலில் சகஜம்.
திராவிட முன்னேற்ற கழகம் எத்தனையோ தேர்தல்களில் ஈடுபட்டிருக்கிறது. பல வெற்றிகளை பெற்று இருக்கின்றோம். அதே போல பல தோல்வி களையும் கண்டு இருக்கிறோம்.
உள்ளாட்சி தேர்தல் ஒத்தி வைக்கப் பட்டு இருக்கிறது என்று தான் நான் சொல்கிறேனே தவிர, நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதென்று சொல்ல வில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தி.மு.க. முன்னின்று உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி விட்ட தென்று, ஒரு தவறான பிரசார த்தை இன்னமும் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கி ன்றார்கள். அதன் காரணம் என்ன வென்று எனக்கே இன்னும் புரிய வில்லை.
தேர்தல் குறித்து வழக்கு தொடர்ந்த ஆர்.எஸ்.பாரதி இதே மேடையில் அமர்ந்து இருக் கிறார். என்ன வழக்கு தொடர்ந்தார் என்றால், தேர்தலை நிறுத்த வேண்டு மென்று வழக்கு போட வில்லை, தேர்தல் முறை யாக நடை பெற வேண்டும்,
உள்ளாட்சி அமைப்பு களின் தேர்தல் அதிகார த்தில் இருப்ப வர்கள் விருப்பத் திற்கு ஏற்ப நடைபெறக் கூடாது, தேர்தல் ஆணையம் ஜனநாயக முறைப் படி, கட்சிப் பாகுபாடு இல்லாமல் தேர்தலை நடத்திட வேண்டும்,
அதற்காக வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும், வாக்குப் பதிவின் போது அங்கு பணியாற்றக் கூடிய அதிகாரிகள், அரசாங்க அதிகாரிக ளாக இருந்தா லும், இந்த மாநிலத்தின் அரசு அதிகாரி களாக இல்லாமல்,
வெளி மாநில அதிகாரி களை கொண்டு தேர்தலை நடத்திட வேண்டும். அதேபோல வாக்கு எண்ணிக்கை நடை பெறுகின்ற இடத்தில் எந்தவித அசம்பா விதமும் நடக்கக் கூடாது,
எனவே ஒவ்வொரு வாக்குச் சாவடியி லும் வெப் கேமரா அமைக்க வேண்டும், அப்படி வைத்தால் தேர்தல் முறையாக நடக்கும், தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை முறையாக நடத்த வேண்டும்
என்ற அடிப்படை யில் தான் நாம் வழக்கு தொடர்ந்தோம். அது மட்டுமல்ல, அந்த வழக்கில் மேல் முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றத் திற்கும் சென்று இருக்கின்றோம்.
வரும் 18-ம் தேதி அதன் விசாரணை நடக்க விருக்கிறது என்பது ஒரு பக்கம். இவை யெல்லாம் உண்மை என்பதை நீதிமன்றம் உணர்ந்த காரணத்தால் தான், இந்த தேர்தல் முறையாக அறிவிக்கப் படவில்லை.
எனவே தேர்தலை முறையாக நடத்த வேண்டும், ஆகவே, தேர்தலை டிசம்பர் மாதம் வரையில் ஒத்தி வைக்கிறோம்.
அதற்கு முன்பாக இந்த பணிகளை எல்லாம் சரியாக செய்யுங்கள் என்று நீதி மன்றம் உத்தரவிட்டு இருக்கிறது என்ற உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதையெ ல்லாம் இங்கு குறிப்பிடக் காரணம் என்ன வென்றால், உள்ளாட்சித் தேர்தல் என்பது மக்க ளுடைய அடிப்படை பிரச்சினை களை தீர்த்து வைக்கக் கூடிய உள்ளாட்சி அமைப்பு களுக்கு நடை பெறுவது.
இன்றை க்கு 89 தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும், நாங்கள் மக்களுக்கு செய்ய எண்ணுவதை எல்லாம் நிறைவேற்ற வேண்டு மென்றால்,
ஆங்காங்கே உள்ளாட்சி அமைப்புகளில் கழகத்தினர் இருந்தால் தான் அந்த பணிகளை நிறை வேற்ற முடியும்.
குடிநீர் பிரச்சனை, சாலை வசதிகள், கழிவுநீர் பிரச்சனைகள் போன்ற பொது மக்களின் அன்றாட பிரச்சனைகள், அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டு மென்று சொன்னால்,
உள்ளாட்சி அமைப்பு களில் கழகத்தின் பிரதிநிதிகள் இருந்தால், அவர்கள் மூலமாக அந்த பணிகளை நாம் உடனுக் குடன் நிறைவேற்ற முடியும். அந்த நிலையை எதிர் நோக்கி நாம் காத்திருக் கிறோம்.
எனவே நமது இயக்கத்தில் இன்றைக்கு வந்து சேர்ந்தி ருக்கக் கூடிய உங்களை எல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது, மகிழ்ச்சி யோடு வந்திரு க்கும் உங்களை எல்லாம் நாங்கள் பெருமையுடன் வரவேற் கிறோம்.
தலைவர் கலைஞரின் சார்பில் வரவேற்கி ன்றோம். ஆனால் என்னதான் நீங்கள் அனைவரும் மகிழ்ச்சி யாக வந்திருந் தாலும், கொள்கைக ளோடு நாங்கள் வரவேற்று இருந்தாலும்,
இந்த கொள்கைகளுக்கு, மகிழ்ச்சி க்கு எல்லாம் சிகரம் வைத்தார் போல உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியை
திமுக பெற்றிட நீங்கள் துணை நிற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.