சர்ஜிகல் ஸ்டிரைக் நடைபெற்றது உண்மை ராணுவம் அறிவிப்பு !

சர்ஜிக்கல் ஸ்டிரக் தாக்குதல் நடை பெற்றது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி வரும் நிலையில், இது தொடர்பான வீடியோ ஆதாரங்களை வெளியிட தயாராக இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
சர்ஜிகல் ஸ்டிரைக் நடைபெற்றது உண்மை ராணுவம் அறிவிப்பு !
ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் அமைந் துள்ள ராணுவத் தலை மையகம் மீது பாகிஸ்தான் பயங்கரவா திகள் அண்மை யில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இந்திய ராணு வத்தினர் 19 பேர் உயிரி ழந்தனர். 

ஏற்கெனவே பதான்கோட் தாக்குதலின் வடுக்கள் மறையாத நிலையில், இந்த த் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி யையும், கொந்தளி ப்பையும் ஏற்படுத்தியது.

பாகிஸ்தா னைச் சேர்ந்த ஜெய்ஷ்- ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவா திகளே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது. 

மேலும், இது தொடர்பான ஆதாரங் களையும் பாகிஸ்தான் அரசிடம் இந்தியா வழங் கியது. ஆனால், பாகிஸ்தான் இதை திட்ட வட்டமாக மறுத்தது. 

இதற் கிடையே, பாகிஸ்தான் ஆக்கி ரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் சதித்திட்ட த்துடன் பயங்கர வாதிகள் பதுங்கியி ருப்பதாக இந்திய ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. 

இதை யடுத்து ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” என்ற அதிரடி தாக்குதலில் இந்திய ராணுவம் ஈடுபட்டு பாகிஸ்தான் பகுதியில் இருந்த பயங்கரவாதிகளின் 7 முகாம் களை அளித்தது. 
இந்த தாக்குதலின் போது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த பாகிஸ்தான் ராணுவத்தி னர் 2 பேரும் கொல்லப் பட்டனர்.

ஆனால், பாகிஸ்தான் சர்ஜிக்கல் ஸ்டிரக் நடைபெற வில்லை என்றும் எல்லை யில் அத்து மீறி துப்பாக்கிச்சூடு மட்டுமே நடைபெற்ற தாகவும் சமாளித்து வருகிறது. 

ஆனால், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் சர்ஜிக்கல் நடைபெற் றதாக கூறப்படுவதை பாகிஸ்தான் மறுத்து வருவதாகவும், 

பாகிஸ்தானின் கூற்றை பொய்யாக்கும் வகையில் வீடியோ ஆதாரம் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதற்கு பாரதீய ஜனதா, ராணுவத்தின் மீது நம்பிக்கை யில்லாமல் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பேசுவதாக கடுமையாக சாடியது.
இந்த நிலையில், எல்லை தாண்டிய தாக்குதல் குறித்த வீடியோ ஆதாரங் களை அளிக்க தயார் என இந்திய ராணுவம் பச்சைக் கொடி காட்டி யுள்ளது. 

ஆனால், இது குறித்து இறுதி முடிவை பிரதமர் அலுவலகம் தான் எடுக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings