விமானத்தில் எடுத்துச் செல்லக் கூடாதது?

விமானத்தில் செல்லும் போது இதை யெல்லாம் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். பல அளவிலான கத்திகள், வாள்கள், ஷேவிங் ரேஸரின் பிளேடுகள், இறைச்சியை அறுக்கும் கருவி, கத்திரிக்கோல்,
விமானத்தில் எடுத்துச் செல்லக் கூடாது?
ஆயுதங்களின் வடிவத்தைப் பிரதிபலிக்கும் பொம்மைகள், கைத்துப்பாக்கி, வெடி பொருட்கள், இரட்டைக் குழல் துப்பாக்கி, காற்றழுத்தத்தால் இயங்கும் 

துப்பாக்கி, கருவிகள், கோடாரி, கடப்பாரை, சுத்தியல், சுவரில் துளையிடும் இயந்திரம், தானியங்கி வீல் சேர், மருத்துவம் தொடர்பான எலெக்ட் ரானிக் பொருட்கள், 

விஷம். கதிரிய க்கத்தை உமிழும் பொருட்கள், பாதரசம், அமிலம், பேட்டரி, காந்தம், பட்டாசுகள், கையெறி குண்டு, பெட்ரோல், மண்ணென்ணெய், 

பெயின்ட், தீப்பெட்டி, சிகரெட் லைட்டர், பலவிதமான ரசாயனங்கள், துருப்பிடித்த பொருட்கள், அலாரம் கொண்ட பெட்டிகள், வெடி மருந்து, எரியும் தன்மை உடைய பொருட்கள், 

வெடிகளின் வடிவத்தைப் பிரதிபலிக்கும் பொம்மைகள், பிளாஸ்டிக் வெடிபொருள் இவற்றைத் தவிர குறிப்பிட்ட அளவிலான ஐஸ், ஆல்கஹால், 

எலெக்ட்ரானிக் சிகரெட், நீர் ஆகாரம், மருத்துவ சாதனங்கள், ட்ரிம்மர், குடை, பாடி ஸ்பிரே, மருந்து பாட்டில்கள், அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்லலாம். 

ஆனால் விமான பயணம் மேற் கொள்ளும் போது, இஷ்டத் திற்குப் பொருட் களை கொண்டு செல்வது, கடைசி நேரத்தில் சிரமத்தை ஏற்படுத்தும். 

எனவே சரியான முறையில் தேவை யான பொருட்களை மட்டும் பேக் செய்து கொண்டாலே பெரும் சிக்கலைத் தவிர்க்கலாம். 

இந்த வழி முறைகளை மனசுல வச்சுக்கங்க... 

1. எவ்வளவு எடையுள்ள பொருட்களை நாம் கொண்டு செல்ல முடியும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
2. அவற்றில் அதிக விலை மதிப்புள்ள பொருட் களை வைக்காமல் இருப்பது நல்லது.

3. அனுமதிக்கப் பட்ட அளவை விட அதிக பொருட் களை வைத்தி ருந்தால், அவற்றிற்கு கூடுதல் விலை செலுத்த வேண்டி யிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

4. பெட்டிகளில் பெயர் மற்றும் விலாசத் துடன் கூடிய லேபிள்களை கண்டிப்பாக ஒட்ட வேண்டும்.

5. எந்த பொருட்களைக் கொண்டு செல்லக் கூடாது என்ற விபரங்களை அறிந்து கொள்வது அவசியம்.

6. தேவையான மருந்துகள், ஆவணங்கள், பணம், விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை கைப்பையில் மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள்.

7. மற்றவர்கள் கொடுக்கும் பொருட்களை எக்காரணம் கொண்டும் வாங்க வேண்டாம்.
விமானத்தில் எடுத்துச் செல்லக் கூடாதது?
8. அப்படி தவிர்க்க முடியாத சந்தர்ப் பங்களில் மட்டும், உள்ளே என்ன இருக்கிறது என்பதை பொறுத்து சூழ்நிலைக்கேற்ப செயல் படுங்கள்.

9. பாதுகாப்பு காரணங் களுக்காக, உங்கள் உடைமைகளை நீங்கள் சரியாக கணிக்க வேண்டி யிருக்கும் என்பதால், ஏதேனும் அடையாள ங்களை உண்டாக்கிக் கொள்வது நலம்.
10. நீங்கள் கொண்டு வந்த பெட்டி/பேக் ஆகிய வற்றை பத்திரமாக உடன் வைத்தி ருங்கள். 

ஏனெனில் விமான நிலையத்தில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் கேட்பாரின்றி இருக்கும் பொருட்களை உடனடியாக அப்புறப் படுத்தி விடுவார்கள்.

11. தனிப்பட்ட முறையில் பேட்டரி, ஆயுதங்கள், வெடி பொருட்கள் ஏதெனும் வைத்தி ருந்தால், அவற்றைப் பற்றி சோதனைச் சாவடியில் தெரிவிக்கவும்.

12. எக்ஸ்-ரே மெஷினில் உங்கள் உடைமைகள் அனைத்தையும் முதலில் வைத்து விட்டு, கடைசியாக நீங்கள் செல்ல வேண்டும்.
Tags:
Privacy and cookie settings