ஆரோக்கியத்தை தரும் பாரம்பரிய பாத்திரங்கள் !

2 minute read
மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக் கூடியது. உணவில் சுவையைக் கூட்டக் கூடியது. நீண்ட நேரத்து க்குக் கெடாமலும் சுவை மாறா மலும் இருக்கும். 
ஆரோக்கியத்தை தரும் பாரம்பரிய பாத்திரங்கள் !
உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றி வைத்தால் புளிக் காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சி யாகவும், சுவையா கவும் இருக்கும்.

இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான் மையான வீடுகளில் இது பயன் பாட்டில் இல்லை.

மண் பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோக ங்களை நம் முன்னோர் கள் பயன் படுத்தினர்.

வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச் சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவ ற்றைச் சமநிலைப் படுத்தும்.

பித்தளை மற்றும் செம்புப் பாத்திர த்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னை கள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப் படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
செம்புப் பாத்திர த்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது. இரும்புப் பாத்திரத் தில் சமைக்கும் போது, உடலில் ரத்த விருத்தி அதிகரி க்கும்..

உடலை எஃகு போல உறுதிப் படுத்தும். கண் சம்பந்தப் பட்ட நோய்கள் வராது. இளைத்த வனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக் கால அறிவுரை.

எஃகு பாத்திர த்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படி யான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும். ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும் போது, வாசனை ஊரைக் கூட்டும்.

இப்படி உடல் ஆரோக்கி யத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்ப ரியப் பாத்திரங் களைப் பயன்படுத் தினால், உடல் ஆரோக்கி யமாக இருக்கும்.
இன்றைக்கு நவீன சாதனங் களுக்கு நாம் பழகி விட்டாலும், ஆரோக்கி யத்தைக் கருத்தில் கொண்டு, நம் முன்னோர்கள் பயன் படுத்திய பாத்தி ரத்தைப் பயன் படுத்த ஆரம்பிக் கலாமே!
Tags:
Today | 17, April 2025
Privacy and cookie settings