தூத்துக்கடி மாவட்டம் கோவில் பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. கோவில் பட்டியி லிருந்து அரசு பேருந்தில் பயணம் செய்த அவரை துப்பாக்கி யால் பொசுக் என்று சுட்டுவிட்டு ஓடி விட்டனர் அவருடன் வந்தவர்கள்.
கோவில் பட்டியிலி ருந்து விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பதற்றத் தோடு நிறுத்தப் பட்டது.
உடன் பயணித்த பயணிகள் சிலர் ஓட்டம் பிடிக்க தொடங்கினர். அப்போது தான் இளைஞர் கருப்பசாமி சுட்டு கொல்லப் பட்டது தெரிய வந்தது.
சுட்டு கொல்லப் பட்டவர் கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த கருப்புசாமி என்பது போலீஸ் விசாரணை யில் தெரிய வந்துள்ளது.
நாகர் கோவிலில் இருந்து கிளம்பிய இந்த அரசு பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டி ருந்தது.
இந்த பேருந்து கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் நின்றவுடன் 3 இளைஞ ர்கள் அதில் ஏறியுள்ளனர். அந்த மூன்று பேரும். நெருங்கிய நண்பர்கள் போல நடந்து கொண்டனர்.
பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்த பிறகும் 3 பேரும் சகஜமாக பேசிக் கொண்டு வந்திருக்கின்றனர்.
ஆனால், பேருந்து கிளம்பிய 15 நிமிடத்திற்குள் அவர்களு க்குள் ஏதோ வாக்கு வாதம் ஏற்பட் டுள்ளது. காலை 11.15 மணிக்கு பேருந்து சாத்தூர் வந்த போது அவர்களுக்குள் வாக்கு வாதம் முற்றியது.
அப்போது அந்த மூவரில் தடித்த உருவம் கொண்ட ஒருவர் துப்பாக் கியை எடுத்து சுட்டதும், இருக்கையில் அமர்ந்தி ருந்த இளைஞர் ரத்தம் பீறிட்டு சரிந்தார்.
இதைக் கண்டதும் பயணிகள் அலறி யடித்து பேருந்தில் இருந்து குதித்து ஓடினர். துப்பாக் கியால் சுட்ட நபரும், அவருடன் இருந்த நபரும் தப்பியோடி விட்டனர்.
முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடை பெற்றதா என்ற கோணத்தில் போலீசார் மேற் கொண்டு விசார ணையை துவங்கி யுள்ளனர்.
நண்பர்கள் போன்று பேசி கொண்டு வந்த இளைஞர் களில் ஒருவர் துப்பாக்கி யால் ஒரு நொடிக்குள் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம் கோவில் பட்டி சாத்தூர் ஆகிய பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட கருப்பசாமி யின் சகோ தரர்கள் மந்திர மூர்த்தி மற்றும் கனகராஜ் ஆகியோர் தற்போது ஒரு கொலை வழக்கு தொடர்பாக சிறையில் உள்ளனர்.
அவர்கள் சகோத ரர்கள் சம்மந்தப் பட்ட கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே கருப்பசாமி கொலை செய்யப் பட்டிருக்க லாம் என்ற தகவல்களும் வெளியாகி யுள்ளன.
கருப்பசாமி கோவை யில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கருப்பசாமி கொலை தொடர்பாக அந்த பேருந்தில் பயணித்த அவரது நண்பர் ரமேஷ் என்பரை போலீசார் தேடி வரு கின்றனர்.