தூங்கிய இளைஞர் வாயில் புகுந்த பாம்பு !

வேலை களைப்பில் அசந்து உறங்கிக் கொண்டிருந்த போது, எதிர் பாராத விதமாக வாய்க்குள் நுழைந்த பாம்பின் தலையை இளைஞர் கடித்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
தூங்கிய இளைஞர் வாயில் புகுந்த பாம்பு !
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் வினோத் ரகுவான்ஷி. நேற்று பணி முடிந்து திரும்பிய வினோத் வழக்கம் போல் அசதியில், ஆவென வாயைத் திறந்த படி குறட்டை விட்டுத் தூங்கி யுள்ளார். 

அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று அவரின் வாயினுள் நுழைந் துள்ளது. ஆனால், நல்ல தூக்கத் தில் இருந்த வினோத், அந்தப் பாம்பைக் கடித்து இரண்டு துண்டுக ளாக்கி விட்டார். 

வால் பகுதி கீழே விழுந்து விட, வாயில் கிடைத்த தலைப் பகுதியை மென்று விழுங்கி விட்டார். அப்போது எதேச்சை யாக வினோத் அறைக்கு வந்த அவரின் தாயார் மகன் வாயில் இரத்தம் வழி வதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தார். 

கூடவே, வினோத் தின் அருகில் பாம்பின் தலை யில்லாத உடல் கிடந்ததால் பீதி அடைந்து, உடனடியாக அவரை எழுப்பி யுள்ளார். அப்போது தான் வினோத் பாம்பின் தலையை கடித்து விழுங் கியது தெரிய வந்தது. 

அதனைத் தொடர்ந்து உடனடி யாக அருகில் உள்ள மருத்துவ மனைக்கு சிகிச்சைக் காக கொண்டு செல்லப் பட்டார் வினோத். அங்கு வினோத்தின் கதையைக் கேட்ட மருத்துவ ர்கள் அதிர்ச்சி யில் ஆழ்ந்தனர். 
பின்னர் அவருக்கு அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போன்று சில மாதங்களுக்கு முன்னதாக ஜார்கண்ட் மாநிலத்தில் காட்டுவாசி ஒருவர், கட்டு விரியனை கடித்து கொன்ற, அடுத்த 12 மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

ஆனால், 3 ஆண்டுகளுக்கு முன்ன தாக நேபாளில் நடந்த இது போன்ற சம்பவத்தில் பாம்பை கடித்தவர் உயிரிழக்க வில்லை. தற்போது அதிர்ஷ்டவ சமாக வினோத்தும் உயிர் தப்பி யுள்ளார்.
Tags:
Privacy and cookie settings