அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதன் மூலம் ஹெச்-1பி விசா வழங்குவதில் அதிகளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப் படுவது உறுதியான நிலையில்,
150 பில்லியன் டாலர் வர்த்தகச் சந்தையைக் கொண்டி ருக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள் இப்பிரச்சனையைத் தீர்க்க புதிய திட்டத்தைத் தீட்டி யுள்ளது.
இப்புதிய திட்டத்தின் மூலம் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ போன்ற முன்னணி நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்காத வகையில் இத்திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
அது சரி, இந்தியாவில் இருந்து ஐடி ஊழியர்கள் அமெரிக்காவிற்குச் செல்லும் வாய்ப்புகள் எப்படி உள்ளது.?
150 பில்லியன் டாலர் சந்தை
உலகளா விய வர்த்தகத்தைக் கொண்டி ருக்கும் இந்திய ஐடி நிறுவனங் களுக்கு இந்தியா வைத் தாண்டி மிகப் பெரிய வர்த்தகச் சந்தை கொண்டி ருப்பது அமெரிக்கா.
அதுமட்டும் அல்லாமல் இச்சந்தையில் செய்யப் படும் வர்த்த கத்தில் அதிகள விலான லாபமும் உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிலை யில் டொனால்டு டிரப்ம் வெற்றி, விசா கட்ட ணங்கள் உயர்வு, புதிய கட்டுப் பாடுகள் எனப் பல பிரச்சனை களைச் சந்தித்து வருகிறது இந்திய ஐடி நிறுவ னங்கள்.
புதிய திட்டம்
இந்நிலை யில் விசா பிரச்சனை களைத் தீர்க்க இந்திய ஐடி நிறுவ னங்கள் அடுத்தச் சில மாதங்க ளுக்குள் அமெரிக்கச் சந்தையில் இருக்கும் சில நிறுவனங் களை முழுமை யாக வாங்கி விடத் திட்ட மிட்டுள்ளது.
இது மட்டும் அல்லாமல் பல முக்கியக் கல்லூரி களில் இருந்து பட்டதா ரிகளை நேரடி யாகப் பணியில் அமர்த்தத் திட்ட மிட்டுள்ளது.
நிறுவன கைப்பற்றல்..
டொனால்டு டிரப்ம் தனது தேர்தல் பிரச்சார த்தில் அறிவித் ததைப் போல், வெளி நாட்டு நிறுவனங் களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் அமெரிக்க நிறுவன ங்கள் மீது 35 சதவீத கார்ப்பரேட் வரி விதிக்கப் படும்
என அறிவித்த நிலையில் இனி எந்த ஒரு அமெரிக்க நிறுவன மும் இந்திய நிறுவன ங்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கத் தயங்கும்.
இந்தப் பிரிச்சனை யைத் தீர்க்க இந்திய ஐடி நிறுவனங் களான டாடா கன்சல் டன்சி சர்வீசஸ், விப்ரோ, இன்போசிஸ், எச்சிஎல்,
மைண்ட்டிரீ ஆகிய நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களை வாங்கு வதன் மூலம் அதன் வாயிலாகத் திட்டங்களைப் பெற்ற முடிவு செய்து ள்ளது.
கேம்பஸ் இண்டர்வியூவ்
இந்தியாவில் ஐடி நிறுவனங்கள் செய்வதைப் போலவே அமெரிக்காவில் கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களை நேரடியாக
நிறுவனத்தில் அமர்த்துவதன் மூலம் குறைந்த சம்பளத்தில் வேலை வாய்ப்புகளை அளிக்க முடியும்.
இதற்கு முன் இத்தகைய திட்டத்தில் இந்திய நிறுவ னங்கள் ஆர்வம் காட்ட மறுத்தது. காரணம் அப்போது ஹெச்-1பி விசாவில் எவ்வித மான பிரச்ச னைகள் இல்லை.
இப்போது அனுபவம் வாய்ந்த பணியாளர்களுக்கு அளிக்கும் சம்பளத்தை விடப் பட்டதாரிகளுக்கு அளிக்கும் சம்பளம் மிகவும் குறைவு.
இதனை மையமாக வைத்து இத்திட்டத்தை வகுத்துள்ளது இந்திய ஐடி நிறுவனங்கள்.
86,000 விசா
2005-14 ஆண்டுகள் வரையி லான காலத்தில் இந்தியர் களுக்குச் சுமார் 86,000 ஹெச்-1பி விசா வழங்கி யுள்ளது. இது ஒரு ஆண்டுக் கான மொத்த விசா எண் ணிக்கை.
10 ஆண்டு களில் ஒரு ஆண்டுக்கு அளிக்கப் பட வேண்டிய அனைத்து விசா வையும் இந்தியா பெற்றுக் கொண் டுள்ளது. இதனைத் தாண்டி எல்-1 விசா கணக்கு தனி.
டொனால்டு டிரம்ப்
மேலும் ஹெச்-1பி மற்றும் எல்-1 விசா வழங்குதல் குறித்து அமெரிக்க நாடாளு மன்றத்தில் செனேட்டார் ஜெப் தலைமையிலான கூட்டத்தில்
தாக்கல் செய்யப்பட்ட மசோதாவை புதிய அதிபரான டொனால்டு டிரம்ப் தனது பிரச்சாரக் கூட்டத்தின் துவக்கத்தின் முதல் ஆதரித்து வருகிறார்.
இந்த மசோதா குறித்து முழுமையான தகவல்களைப் பெறக் கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்.
முழுமை யான தடை
தற்போது அமெரிக்காவில் நிலவி வரும் விசா மற்றும் குடியேற்பு விதிகளில் கட்டுப்பாகள் மூலம் இத்துறையில் இனி திறன் வாய்ந்த
தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு அளிக்கப் படும் விசா முழுமையாகத் தடை செய்யப்படுமா என்ற கேள்விகளும் அமெரிக்கச் சிலிக்கான் வேலி வல்லுனர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்தத் தடையி னால் அமெரிக்க நிறுவனங் களுக்கும் பாதிப்பு தான். காரணம் உலக ளவில் மிகவும் குறைந்த செலவுகளில் மேம்பட்ட தகவல் தொழில் நுட்ப சேவை அளிப்பது இந்திய நிறுவனங்கள் தான்.
இந்தப் பாதிப்பால் தங்களின் வர்த்தகமும் பாதிக்குமாக என்ற கேள்வி அமெரிக்க நிறுவனங்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இன்போசிஸ்
இந்தப் பிரச்சனை களைக் கட்டுக்குள் கொண்டு வர தற்போது இன்போசஸ் நிறுவனம் அதிகளவில் அமெரிக்க வாழ் குடிமக்களைப் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளது என இன் போசிஸ் ராவ் தெரிவித் துள்ளார்.
இத்திட்டத்தின் படி ஒவ்வொரு காலாண்டிலும் 500-700 பட்டதாரிகளை (Freshers) தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்து அமெரிக்கா பிரிட்டன் மற்றும்
ஐரோப்பிய நாட்களில் பணியில் அமர்த்தத் திட்ட மிட்டுள்ளோம். இதன் படி 80 சதவீத ஊழியர்கள் அந்நாட்டு மக்களா கவே இருப் பார்கள் என்பது குறிப்பிட த்தக்கது.
2 பில்லியன் டாலர் முதலீடு
இந்திய ஐடி நிறுவ னங்கள் கடந்த 5 வருடங்களில் மட்டும் சுமார் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்து ள்ளது. இதில் மேற்கு அமெரிக் காவில் பாதிக்கும் அதிகமான தொகை முதலீடு செய் துள்ளது.
தற்போதைய நிலையில் கூடுதல் முதலீடுடன் அமெரிக் காவில் புதிய நிறுவனங்களைக் கைப்பற்றுவதன் மூலம் தனது வர்த்தகத்திற்கு
எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இந்திய ஐடி நிறுவனங்கள் பார்த்துக் கொள்ளும் என்பது உறுதி.
அதிக ஊழியர்கள் மற்றும் புதிய டெக்னாலஜி
தற்போதைய நிலையில் இந்திய ஐடி நிறுவன ங்கள் தனது ஊழியர்கள் எண்ணி க்கையை ஆப்சோரில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதன் மூலம்
தனது வாடிக்கை யாளர்களுக்கு ஆட்டோ மேஷ்ன், கிளவுட் கம்பியூடிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை வழங்க முடிவு செய்துள்ளது.
இத்தகைய மாற்றம் மேற்கத்திய நாடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.
அமெரிக்கா வில் புதிய மசோதா
அமெரிக்கா வில் 2 செனேட் டர்கள் ஹெச்-1பி விசாவை இனி ஊதிய அடிப்படை யிலான அமைப்பில் மட்டுமே வழங்க வேண்டும் என அமெரிக்க நாடாளு மன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர்.
இதற்கான ஒப்புதல்களை நெல்சன் மற்றும் ஜெஃப் தலைமையிலான ஆலோசனை கூட்டம் அளித்தது.
இந்த மசோவின் பாதிப்பு என்ன..?
வருடத்திற்கு 85,000 விசா
ஒவ்வொரு வருடமும் அமெரிக்க அரசு 65,000 பொது வான ஹெச்-1பி விசாக் காளையும், 20,000 விசாக் களை அறிவியல், தொழில் நுட்ப, என்ஜினி யரிங் மற்றும் கணித பட்டதாரிகளுக்கு அளித்து வருகிறது.
ஆக மொத்தம் சுமார் 85,000 விசாக் களை அமெரிக்க அரசு உலக நாட்டு மக்களு க்கு அளித்து வருகிறது.
பாதிப்பு..
அமெரிக்க நாடாளு மன்றத்தில் சில மாதங்க ளுக்கு முன் ஒப்புதல் அளிக்கப் பட்ட மனுவின் படி 85,000 விசாக் களில் முதல் 15,000 விசாக் களை அதிகச் சம்பளம் வாங்கு வோருக்கு மட்டும் அளிக்க வேண்டும் எனவும்,
மீத முள்ள 70,000 விசாக்க ளையும் அதிக ஊதிய அடிப்ப டையில் வழங்க வேண்டும் எனச் செனேட் டார்கள் தங்களது மனுவில் குறிப்பிட் டுள்ளனர்.
செக்
இத்தகைய முறை யின் மூலம் அதிகச் சம்பளம் வாங்கு வோருக்கு எளிதாக அமெரிக்க ஹெச்-1பி விசா கிடைப்பது மட்டும் அல்லாமல்,
அவுட் சோர்சிங் நிறுவனங்களால் குறைவான சம்பளம் பெறும் ஊழியர் களை, அமெரிக்க நிறுவன ங்களில் நியமிக்க முடியாது.
மேலும் அமெரிக்கா வரும் பிற நாட்டவர் களுக்கு அமெரி க்கக் குடிமக் களுக்கு இணை யான சம்பள த்தைப் பெறு வார்கள் எனவும் இந்த மனு விவரி க்கிறது.
விசா கட்டணம்
உயர்வு அமெரிக் கக் காங்கிரஸ் அளித்த மனுவின் படி ஹெச்-1பி விசா கட்டண த்தை 4,000 டாலரா கவும், எல்-1 விசாவிற் கான கட்டண த்தை 4,500 டாலராகவும்
உயர்ந்த அமெரிக்க நாடாளு மன்றத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டு நடை முறைக்குக் கொண்டு வரப்பட உள்ளது.
Tags: