கர்நாடகாவில் சண்டை காட்சியில் ஹெலிகாப்டரில் இருந்து குதித்த 2 கன்னட நடிகர்கள் ஏரியில் மூழ்கினார்கள். அவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கன்னட நடிகர் துனியா விஜய் கதாநாய கனாக நடிக்கும் படம் மஸ்தி குடி. இந்த படத்தின் படப் பிடிப்பு பெங்களூரு நகரின் பல்வேறு பகுதி களில் நடந்து வந்தது.
துனியா விஜய் ஹெலிகாப்டரில் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியன்றை பெங்களூரு அருகே உள்ள திப்ப கொண்டன ஹள்ளி ஏரியில் படமாக்க திட்டமிட்டனர்.
இதற்காக மாலை 2 மணிக்கு ஏரி அருகில் படக்குழுவினர் திரண்டார்கள் ஹெலிகாப் டரும் வரவ ழைக்கப்பட்டது.
துனியா விஜய் மற்றும் வில்லன் நடிகர்கள் உதய், அனில் ஆகியோர் அந்த ஹெலி காப்டரில் ஏறினார்கள். ஹெலி காப்டர் ஏரியின் நடுவே உயரத்தில் பறக்க கேமரா வில் சண்டை காட்சி பட மானது.
3 பேரும் ஆக்ரோஷ மாக சண்டையிடுவது போன்றும் பின்னர் அவர்கள் மூவரும் ஒருவர் பின் ஒருவராக ஏரியில் குதிப்பது போன்றும் அந்த காட்சி படமாக்கப் பட்டது.
100 அடி உயரத்தில் இருந்து அவர்கள் குதி த்தார்கள். அவர்களில் விஜய் மட்டும் நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தார். உதய், அனில் இருவரும் நீண்ட நேரமா கியும் கரைக்கு வரவி ல்லை.
அவர்கள் நீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது. இதற்கி டையே அங்கு மீட்பு பணிகள் தொடங்கியது. நீருக்குள் மூழ்கி மீட்பு பணியில் ஈடுபடும் வீரர்கள் உடனடியாக வரவழை க்கப்பட் டனர்.
போது மான பாதுகாப்பு முன்னெச் சரிக்கை நடவடி க்கைகள் இல்லாமல் படபிடிப்பு நடத்தப் பட்டு உள்ளது.
ஏரியில் பாதுகாப்பு அபாய ங்களை அளவி டவும் முன்னதாக எந்தஒரு ஒத்திகை நடவடி க்கையும் எடுக்க வில்லை என்று கூறப்ப டுகிறது.
போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாயமான இரு நடிகர்க ளுக்கும் போதுமான அளவு நீச்சல் தெரியாது என்றும் கூறப்ப டுகிறது.
ஏரியில் சூட்டிங் நடந்த போது அங்கு ஆம்பு லன்ஸ் கூட நிறுத்தி வைக்கப் படவில்லை என்று தெரிய வந்து உள்ளது.