எந்த அடிப்படையில் 2000 ரூபாய் நோட்டில் தேவநகரி பயன்படுத்தினீர்கள்?

எந்த அடிப்படை யில் தேவநகரி எண் வடிவத்தை 2000 ரூபாய் நோட்டில் பயன் படுத்தினீர் கள் என மத்திய அரசுக்கு, மதுரை ஹைகோர்ட் கிளை கேள்வி எழுப்பி யுள்ளது.
எந்த அடிப்படையில் 2000 ரூபாய் நோட்டில் தேவநகரி பயன்படுத்தினீர்கள்?
மதுரையை சேர்ந்த அக்ரிக ணேசன், ஹைகோர்ட் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.  

அதில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்து வந்த 500, 1000 ருபாய் நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என அறிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி புதிதாக ரூ.2000 நோட்டுகளை வெளியி ட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 40 நிமிடம் மட்டுமே இரவு எந்த நாட்டில் தெரியுமா?

இந்த 2000 ரூபாய் நோட்டில் சர்வதேச அளவில் பயன்பாட்டில் உள்ள எண்களின் வடிவங்களுக்கு பதில், தேவநாகரி வடிவத்தில் எண்களை குறிப்பிட்டு உள்ளனர். 

ஹிந்தி மொழியில், எண்களு க்கு தேவநாகரி எழுத்துக் களை பயன் படுத்துகின்றனர். 

மத்திய ஆட்சி மொழியாக இந்தி இருந்தாலும், எண்களை பொறுத்த வரை சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப் பட்ட வடிவங்களை தான் பயன் படுத்த வேண்டும் என்பது சட்டம். 
தேவநாகரி எண்களை பயன் படுத்த வேண்டும் என்றால் நாடாளு மன்றத் தில் சட்டம் நிறை வேற்றப் பட வேண்டும். ஆனால் அது போன்ற எந்த சட்டமும் நிறை வேற்றப்பட வில்லை. 

அரசிய லமைப்பு சட்டம், இந்திய ஆட்சி மொழிகள் அனுமதிக்காத ஒன்றான தேவநாகரி எழுத்துக்களை 2000 ரூபாய் நோட்டில் எண்களு க்காக பயன் படுத்தப் பட்டு உள்ளது. 
இது தவிர ரிசர்வ் வங்கி வாரியத் தில் 5000, 10000 ரூபாய் நோட்டு களை புதிதாக வெளியிட அனுமதி பெறப்பட்ட போது 2000 ரூபாய் வெளியிட அனுமதி பெற வில்லை. 

5000, 10000 ரூபாய் நோட்டுகள் வெளியிடும் திட்டம் கைவிடப்பட்ட நிலையில் ரிசர்வ் வங்கி வாரியத்தில் அனுமதி பெறாத நிலையில் 2000 ரூபாய் நோட்டு களை வெளி யிட்டது சட்ட விரோதம்.
எனவே 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்க வேண்டும்" இவ்வாறு இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டி ருந்தது. இந்த மனு மீதான விசாரணை ஹைகோர்ட் மதுரை கிளையில் இன்று வந்தது. 

அப்போது, எந்த அடிப்ப டையில் தேவநாகரி எண்களை ரூபாய் நோட்டில் பயன் படுத்தினீர் கள் என மத்திய அரசுக்கு ஹைகோர்ட் கிளை கேள்வி எழுப்பியது. 
மேலும், அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விளக்க மளிக்கக் கோரி வழக்கு பிற்பக லுக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings