இன்று நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது மோடி !

1 minute read
இன்று இரவு முதல் ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்துள்ளார். 
இன்று நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது மோடி !
இன்று இரவு 8.15 மணியளவில் டெல்லியி லிருந்தபடி நாட்டு மக்களிடம் தொலைக் காட்சி வழியாக திடீரென உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது இந்த அறிப்பை வெளியிட்டார். 

ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அரசு அழிக்க உள்ள தாகவும், எனவே இன்று அதாவது நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியுடன், அந்த நோட்டுக்கள் செல்லாது எனவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், அரசு ஆஸ்ப த்திரிகள் மற்றும் பெட்ரோல் நிலைய ங்களில் வரும் 11ம் தேதி நள்ளிரவு வரை நோட்டுக்கள் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு க்களை அனைத்து வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் வரும் டிசம்பர் 30ம் தேதிக்கு முன்பாக கொடுத்து, 
புதிய வகை ரூபாய் நோட்டுக்களாக அவற்றை மாற்றிக் கொள்ள வசதி செய்யப்பட்டு ள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே மக்கள் தங்களிடமுள்ள 500 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 30ம் தேதிக்குள் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அதற்கு பதிலாக புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.500 மற்றும், ரூ.2000 முக மதிப்பிலான நோட்டு க்களை அரசு சப்ளை செய்ய உள்ளது.

இது பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என கூறப் படுகிறது. எனவே கள்ள நோட்டு புழக்க த்தையும், பண பதுக்க லையும் தடுக்க முடியும் என கூறப் படுகிறது. 
ரூ.2000 நோட்டுக்களில் அதிநவீன லேயர்கள் இருப்பதால் செயற்கைக் கோள் மூலமாக கூட அவற்றை கண்காணித்து 

பதுக்கலை தடுக்க முடியும் என்று ஒரு தகவல் உலவி வரும் நிலையில் பிரதமர் அறிவிப்பு முக்கிய த்துவம் பெறுகிறது.
Tags:
Today | 13, March 2025
Privacy and cookie settings