முதல்வர் ஜெயலலிதா மனவலிமை மிக்கவர் என்பதால் விரைவாக குணமடைந்து விட்டார். இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள அவருக்கு பிசியோ தெரபி சிகிச்சை அளிக்கப் படுகிறது என்று அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தி ருக்கிறார்.
முதல்வர் உடல்நிலை குறித்து பிரதாப் ரெட்டி இப்படிக் கூறுவது முதல் முறை அல்ல. முதல்வர் நலமுடன் உள்ளார், வீடு திரும்பு வதைப் பற்றி அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று முதலில் பேசியவர்,
அடுத்த முறை முதல்வரின் உடல் உறுப்புகள் சீராவதற்கு ஏழு வாரங்கள் ஆகும் என்று சொல்லிக் குழப் பத்தை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் தான் இன்று பிசியோதெரபி சிகிச்சை என்று மீண்டும் பிரதாப் ரெட்டி சொல்லி யுள்ளார். முதல்வருக்கு பிசியோ தெரபி சிகிச்சை அளிக்க படும் தகவல், கடந்த மாதமே வெளியானது.
குறிப்பாக சிங்கப்பூரில் இருந்து இந்த சிகிச்சை அளிக்க இரண்டு பெண் மருத்து வர்கள் அப்போலோ வுக்கு வருகை தந்தனர்.
ஆனால், ஒரு மாதம் கடந்த பிறகும் ஏன் இப்போது பிசியோ தெரபி சிகிச்சை பற்றி மீண்டும் பிரதாப் ரெட்டி பேசுகிறார் என்ற குழப்பம் ஏற்பட்டி ருக்கிறது.
முதல்வரின் உடல் நிலை எப்படி உள்ளது என்பது குறித்து முழுமையான தகவல் எதுவும் இது வரை யாராலும் உறுதியாக சொல்லப்பட வில்லை என்பது நிதர்சன நிலை.
அது மட்டு மின்றி முதல்வரைத் தனி அறைக்கு மாற்றிய தாக அ.தி.மு.க வினர் கொண்டாடி வந்த நிலையில் அந்தத் தனி அறையும் கிட்டதட்ட ஐ.சி.யூ நிலை தான் என்ற தகவல் அ.தி.மு.க-வினரை சோர் வடையச் செய்து விட்டது.
இந்நிலையில், இன்று காலை அப்போலோ மருத்துவ மனைக்கு ரோபோடிக் இயந்திரம் ஒன்று கொண்டு செல்ல பட்டதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளது.
தற்போது அந்த இயந்திரம் முதல்வர் அனுமதிக் கப்பட்டி ருக்கும் இரண்டாவது தளத்தில் வைக்கப் பட்டிருப் தாகக் கூறப் படுகிறது.
இந்த இயந்திர விவகாரம் குறித்து மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து கசியும் தகவல்கள் இது தான் முதல் வருக்குக் கழுத்தில் துளை போடப்பட்டு மருத்துவ உபகரணங்கள் பொருத்தப் பட்டுள்ளதால், பேசுவது கடினமாக இருக்கிறது.
எனவே, படுக்கையில் இருந்த படியே அவரைப் பேச வைப்பதற்கு இப்போது சிகிச்சை அளிக்கப் படுகிறது.
சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவ மனையில் ரோபோடிக் தெரபி முறையில் இயந்திரத்தின் உதவி கொண்டு உடல் அசைவை மேற்கொள்ளும் சிகிச்சை முறை பிரசித்தி பெற்றது.
அந்த இயந்திரத்தை இப்போது அப்போ லோவுக்கு கொண்டு வந்துள்ளார்கள். முதல் வருக்கு பிசியோதெரபி சிகிச்சை யோடு, ரோபோட்டிக் தெரபி சிகிச்சை யையும் மேற்கொள்ளத் திட்ட மிட்டுள்ளார்கள்.
இந்த நிலையில், முதல்வர் எப்போது வீடு திரும்புவார் என்பது முடிவு செய்யப்பட வில்லை.
வீடு திரும்பும் அளவுக்கு அவரது உடல்நிலை இப்போது இல்லை என்பது தெரிகிறது என்கிறார்கள். மருத்துவர் களைத் தாண்டி இப்போது இயந்திர த்துக்குப் போய் விட்டார்கள் அப்போலோ நிர்வாகத்தினர்.