உடற் பயிற்சி செய்யும் பெண்களின் உள்ளாடை !

ஆரோக்கி யமோ அல்லது அழகு சார்ந்தோ, அனைத்து வயதி னருமே உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வது அவசிய மாகி விட்டது.

இதற்காக, முன் எப்போதும் இல்லாததை விட, சற்று அதிகமா கவே மெனக்கெட வேண்டியி ருக்கிறது என்பதை மறுப்பத ற்கில்லை.

இந்நிலை யில், உடற் பயிற்சி மேற் கொள்ளும் போது பெண் களுக்கு வரும் மார்பு வலிக்கும், அவர்கள் அணிகிற உள்ளா டைக்கும் தொடர் புண்டு என்கிறார் உடற் பயிற்சி நிபுணர் சுசீலா.

“இன்று அனைத்து வயது பெண் களுமே உடற் பயிற்சி, யோகாப் பயிற்சி களில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். ஜிம்மில் சேர்ந்து கடுமை யான பயிற்சி களைக் கூட செய்கி றார்கள்.

இந்நிலை யில், பயிற்சி களில் ஈடுபடும் போது, பெண்கள், ஆண் களைக் காட்டிலும் சற்று கூடுதல் சங்கடங் களை சந்திக்க நேரிடுகிறது. அவற்றில், மார்பு வலி மற்றும் மார்பு தொய்வு முக்கிய மானவை.

சாதாரண மாகவே உடற் பயிற்சிகள் மேற் கொள்ளும் போது அனைவ ருக்குமே கை, கால் தசைகளில் வலி ஏற்படும்.

அது போலத் தான் இந்த மார்பு வலியும். தொடர்ந்து செய்து வரும் போது கை, கால் தசைகளில் வரும் வலி போன்று தானாகவே சரியாகி விடும். 

இதில் பயப்படு வதற்கு ஒன்று மில்லை. ஆனால், சில பெண்களு க்கு மார்பு காம்பிலும், அதைச் சுற்றி யுள்ள பகுதிக ளிலும் வலி உண்டாகும்.

இது ஹார்மோ ன்கள் பிரச்னையா என மருத்துவரை அணுகி அதற்கான காரண த்தை அறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிலர் சாதாரண பிரா, டிஷர்ட் அணிந்து கொண்டு கடும் உடற் பயிற்சிக ளில் ஈடுபடு வதைப் பார்க் கலாம். இதனால் மார்புப் பகுதிகள் அதிக அசைவு களுக்கு உள்ளாகி வலி உண்டாகும்.

தொடர்ந்து உடற் பயிற்சி செய்யும் போது அப்பகுதி யிலுள்ள கொழுப்பு தசைகள் குறைவதால் சுருங்க ஆரம்பி த்து நாளடை வில் தொய் வடைய ஆரம்பித்து விடும்.
இவர்கள் ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து கொள்வது அவசியம். தற்போது பிரத்யே கமாக மோல்டட்கப் பொருத்தப் பட்ட ஸ்போர்ட்ஸ் பிராக்கள் விற்பனை க்கு வந்து விட்டன. 

இவற்றை அணிந்து கொண்டு உடற் பயிற்சி செய்வதால், மார்பு களின் அசைவு கள் கட்டுப் படுத்தப் பட்டு வலி மற்றும் தொய்வடை வதைத் தவிர்க்க லாம்” என்கிறார் சுசீலா.
Tags:
Privacy and cookie settings