தற்போது நிறையபேர் மன அழுத்தத்தினால் அவஸ்தைப் படுகிறார்கள். அதிகமான வேலைப் பளுவினால் எப்போதும் டென்சனுடனும், மன இறுக்கத் துடனுமே இருக்கின்றனர்.
எனவே தங்களை ரிலாக்ஸ் செய்வதற்காக வார இறுதியில் மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவார்கள். சிலர் ஸ்பா சென்று நன்கு மசாஜ் செய்து, உடலை ரிலாக்ஸ் அடையச் செய்வார்கள்.
ஆனால் நம் மனதை ரிலாக்ஸ் அடையச் செய்ய, பணம் அதிகம் செலவழிக்காமல் மிகவும் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்.
அதுவும் நம் சமையலறையில் உள்ள அற்புத முலிகையான பிரியாணி இலையைக் கொண்டே எளிதில் மனதை அமைதியடையச் செய்யலாம்.
பிரியாணி இலை
சமையலறையில் இருக்கும் பிரியாணி இலை, சமையலில் உணவின் மணத்தையும், ருசியையும் அதிகரிக்க மட்டுமின்றி, அதன் நறுமணம் பல அரோமா தெரபிகளில் சுவாச பிரச்சனை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.
ரஷ்ய ஆய்வாளர்
ரஷ்ய ஆய்வாளர் கென்னடி பிரியாணி இலை மன அழுத்தத்தைக் குறைப்பதாக கண்டறிந்தார். மேலும் இதை எவ்வாறு பயன்படுத்தினால், மன அழுத்தம் நீங்கும் எனவும் கூறியுள்ளார். அதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மனதை ரிலாக்ஸ் செய்யும் வழி
மனதை ரிலாக்ஸ் அடையச் செய்வதற்கு பிரியாணி இலையை வீட்டின் ஒரு அறையினுள் ஒரு பாத்திரத்தில் போட்டு 10 நிமிடம் எரிக்க வேண்டும். பின் அந்த அறையிலேயே 10 நிமிடம் இருந்து, அதன் நறுமணத்தை நன்கு சுவாசிக்க வேண்டும்.
நன்மை #1
பிரியாணி இலையின் நறுமணம் தீங்கு விளைவிக்கும் மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்து, மனதை அமைதியுடனும், ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ளும்.
வெற்றி பெறுபவர்கள் செய்யும் செயல்கள் !
நன்மை #2
பிரியாணி இலையை வீட்டினுள் எரித்தால், வீட்டில் இருக்கும் துர்நாற்றம் வெளியேறி, வீடே நல்ல நறுமணத்துடன் இருக்கும். மேலும் இந்த நறுமணம் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை உற்பத்தி செய்யும்.