தங்கல் படத்துக்காக உருவத்தை மாற்றிய அமீர்கான் !

1 minute read
அமீர் கானின் தங்கல் படம் டிசம்பர் 23ல் வெளி யாக உள்ளது. தமிழிலும் இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்த படத்தில் வயதானவர், இளைஞர் என இரண்டு கதாப் பாத்திரங்களில் நடித்துள்ளார் அமீர்.
தங்கல் படத்துக்காக உருவத்தை மாற்றிய அமீர்கான் !
ஒரு கேரக்டருக்கு அதிக எடை போட்டும், இன்னொரு வேடத்துக்கு சிக்ஸ் பேக்குடனும் நடிக்கிறார். குண்டான அமீர் எப்படி ஃபிட்டாக மாறுகிறார் என்ற வீடியோ வெளியிடப் பட்டுள்ளது.

கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் உடல் கொழுப்பை குறைத்து, ஃபிட்டாக மாற உடற்பயிற்சி செய்துள்ளார். 

இந்த அசாத்திய மாற்றம் குறித்து அமீர், குண்டான கதாப் பாத்திரத்துக்காக ஃபேட் சூட் பயன்படுத்தி நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. எனவே 97 கிலோ வரை எடை போட்டேன். 

மிகவும் விரும்பி எனக்கு பிடித்த அனைத்து உணவுகளையும் சாப்பிட்டேன். ஆனால், மறுபடியும் உடல் எடையை குறைக்க மிகவும் சிரமப்பட்டேன். என்று கூறியுள்ளார். 
இந்த வீடியோவின் கடைசியில், குண்டாக இருக்கும் போது அமீர் எடுத்த புகைப்படம் மற்றும் உடல் கட்டுமஸ்தான பின் அமீர் எடுத்த புகைப் படத்தையும் ஒப்பிட்டிப் பார்க்கும் போது தான் அமீரின் மெனக் கெடல் புரிகிறது.
Tags:
Today | 27, March 2025
Privacy and cookie settings