தனுஷ் யார் மகன்? கஸ்தூரி ராஜா விளக்கம் !

தனுஷ் தனது மகன் என்று பத்திரிகை யாளர்கள் மற்றும் தன்னு டைய நண்பர் களுக்கு நன்கு தெரியும் என இயக்குனர் கஸ்தூரி ராஜா தெரிவித் துள்ளார்.
தனுஷ் யார் மகன்? கஸ்தூரி ராஜா விளக்கம் !
நடிகர் தனுஷ் தங்களின் மகன் கலை யரசன் என திருப்பு வனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி தெரிவித்தனர். இதை தனுஷும், அவரது தந்தையான இயக்குனர் கஸ்தூரி ராஜாவும் மறுத்தனர். 

இந்நிலையில் அந்த தம்பதி தனுஷ் தங்களின் மகன் என்று கூறி மதுரை மாவட்டம் மேலூர் குற்றவியல் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது குறித்து கஸ்தூரி ராஜா கூறுகையில்,

வருத்தம்

தனுஷ் என் மகன் அல்ல என வழக்கு தொடரப்பட்டுள்ள செய்தியை அறிந்து வருத்தமாக உள்ளது. இது பதில் சொல்லும் அளவுக்கு தகுதியான விஷயம் கிடையாது.

நண்பர்கள்

என்னை என் நண்பர்கள் மற்றும் பத்திரிகை யாளர்களுக்கு கடந்த 40 ஆண்டுகளாக நன்றாக தெரியும். என் மகன் தனுஷை சிறு வயதில் இருந்தே அனைவ ருக்கும் தெரியும்.
நீதித்துறை

நீதித் துறையின் பொன்னான நேரம் இது போன்ற பொய் வழக் குகளால் வீணடிக்கப் படுகிறதே என்று வருத்தமாக உள்ளது. 

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன. பல பிரச்சனைகளை நீதி மன்றம் தீர்த்து வைக்க வேண்டியுள்ளது.

வீண்

முக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைக்க விடாமல் நீதிமன்றத்தின் நேரம் இது போன்ற பொய் வழக்குகளால் வீணடிக்கப் படுகிறதே என நினைத் தாலே கவலையாக உள்ளது. 

நீதித்துறையை மதிப் பதால் வேறு எதுவும் கூற விரும்பவில்லை.
Tags:
Privacy and cookie settings