உடலில் ரத்தக் கட்டு ஏற்படுத்தும் விளைவுகள் !

மனிதனுக்கு ஏற்படும் உபாதை களில் மிகவும் முக்கிய மானது ரத்தக் கட்டு. அடிபட்ட இடத்தில் ரத்தம் வெளி யேறாமல், கன்றிப் போய், சிவந்து, வீக்கத் துடன் பார்க்கவே பயங்கர மாக காணப்படும். 



ரத்தக் கட்டு ஏற்படக் காரணம், முதலுதவி சிகிச்சை, ரத்தக் கட்டு பாதிப்பில் இருந்து உடல் உறுப்பு களைப் பாதுகாக்கும் விதம் என எல்லாம் பேசுகிறார் டாக்டர் அரவிந்த்.

‘ஒருவரு க்கு அடிபட்ட வுடன் உடலில் இயல் பாகவே ஏற்படும் செயல் முறை 'ரத்தக் கட்டு' என அழைக்கப் படுகிறது. ரத்த நாளங் களில் ரத்தக் கட்டு ஏற்படு வதற்கான செயல் முறைகள் ‘உறைவு உருவாக்கம்’ (Thrombus Formation) எனப்படும். 

ஒரு வருக்கு அடிபட்ட இடத்தில் 3 நிமிடங்களில் இருந்து 8 நிமிடங் களுக்குள் இயல் பாகவே ரத்தக்கட்டு ஏற்பட்டு விடும். இவ்வாறு அடிபட்ட வுடன் மனித உடலில் ரத்தக் கட்டு ஏற்படு வதற்கு ரத்த வட்டுகள் (Platelets) மிக முக்கிய மான காரணியாக விளங்கு கின்றன.

இந்த ரத்த வட்டு களின் எண்ணி க்கை நமது உடலில் ஒன்றரை லட்சம் முதல் நான்கு லட்சம் வரை இருக் கலாம். இவற்றின் எண்ணி க்கை ஒன்றரை லட்சத் துக்கும் குறைவாக இருந்தால், ரத்தக் கட்டுக் குறை பாடுகள் ஏற்படும். 

ரத்த வட்டுகளின் எண்ணி க்கை குறைவாக இருப்பதை த்ரோம் போசைட் டோபீனியா (Thrombocytopenia) என்றும் ரத்த வட்டுகளின் எண்ணி க்கை அதிக மாக இருப்பதை த்ரோம் போசைட் டோசிஸ் (Thrombocytosis) என்றும் குறிப்பிடுவர்.

நமது உடலில் ரத்தக் கட்டை ஏற்படுத்து வதற்கென 13 காரணிகள் உள்ளன. இவை உறைதல் காரணிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. இவற்றில் V, VII, VIII, IX, X ஆகிய உறைதல் காரணிகள் ரத்தக் கட்டு ஏற்படு வதற்கு மிக முக்கிய பங்கு வகிக் கின்றன. 

இந்த உறைதல் காரணி களில் ஏதாவது குறை பாடுகள் இருந்தால் ரத்தப் போக்கு அதிகமாக இருக்கும். ஒருவருக்கு விபத்தில் காயம் ஏற்பட்டால், உடனே முதலுதவி சிகிச்சையை ஆரம்பித்து விட வேண்டும்.

இதனை சுருக்கமாக டாக்டர்கள் ‘Rice’ என அழைப்பர். ‘RÕ என்பதற்கு ரெஸ்ட் என்று பொருள். அதாவது, அடிபட்ட பாகத்துக்கு அதிகமாக அசைவுகள் கொடுக் காமல் இருந்தால், ரத்தக் கட்டு உடனடியாக ஏற்பட உறுதுணை யாக இருக்கும். 

அடிபட்ட இடத்தில் ஐஸ் கட்டிகளைக் கொண்டு ஒத்தடம் கொடுப்பதை Ice Compression என்பர். இதுவும் ரத்தப் போக்கைக் கட்டுப் படுத்தி, ரத்தக் கட்டு ஏற்பட உதவும். இதற்கு நாளங்களில் குறுக்களவு குறைதல் என்று பெயர்.

ரத்தம் வெளியேறும் இடத்தினை பாண்டேஜ் துணியால் கட்டுவதன் மூலம், ரத்தப் போக்கைக் கட்டுப் படுத்தலாம். இந்த சிகிச்சை முறை Compression என அழைக்கப் படுகிறது. இந்த சிகிச் சையைக் கையாளும் போது, பாண்டேஜ் துணியை மிக இறுக்க மாகக் கட்டக் கூடாது.
);
அப்படிச் செய்தால், அடிபட்ட இடத்தின் கீழ்ப்பகுதி க்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும். ரத்தக் கட்டுக்கான முதலுதவி சிகிச்சை முறைகளில், கடைசியாக செய்யப்படுவது ‘E’ Elevation என்பதாகும். 

இதில் அடிபட்ட இடம் அல்லது காயம் பட்ட இடத்தினை உயர்த்தி வைக்க வேண்டும். இதனால், ரத்தப் போக்கு கட்டுப் படுத்தப் பட்டு, ரத்தக் கட்டு ஏற்பட வழி உண்டாகும். இவை அடிபட்ட உடனே மேற் கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் ஆகும்.

இடித்துக் கொள்ளா மலும் காயம் படாமலும் கூட ஒரு வருக்கு ரத்தக் கட்டு ஏற்படு வதற்கான வாய்ப்புகள் உள்ளன. 



இதற்கு ஆழ்ந்த சிரை படிம உறைவு (Deep Vein Thrombosis) என்று பெயர். இவ்வகை ரத்தக் கட்டு கர்ப்பிணி கள், கருத்தரிப்பு மாத்திரை யை அதிகமாக உட்கொள்ளும் பெண்கள், பருமனாக இருப்ப வர்கள்,

நீண்ட நாள் படுத்த படுக்கையாக இருக்கும் வயதானவர்கள் போன்றவர் களுக்கு அதிகம் வரலாம். இவர்களுக்கு ஆழ்ந்த சிரை படிம உறைவு வராமல் தடுக்க

வீட்டில் இருந்த வாறே சில எளிய சிகிச்சை முறைகளை மேற் கொள்ளலாம். வீக்கம் ஏற்பட்ட கை மற்றும் கால்களுக்கு அவ்வப் போது அசைவுகள் கொடுத்துக் கொண் டிருக்க வேண்டும்.

அதன் மூலம், ரத்தம் தேங்கு வதைக் குறைத்து, ரத்தக்கட்டு ஏற்படுவதை தடுக்கலாம். வீக்கம் ஏற்பட் டுள்ள உடல் உறுப்பு களைத் தலையணை வைத்து உயர்த்தி வைக்க வேண்டும். கால்களில் ஏற்பட்டுள்ள வீக்கத்தைக் குறைக்க காலுறை களைப் பயன் படுத்தலாம்.

இப்படி முதலி லேயே வீக்கத்தைக் கட்டுப் படுத்தவில்லை என்றால், ரத்தக் கட்டி உடைந்து நுரையீரல், இதயம், மூளை போன்ற இடங் களுக்குச் சென்று தங்கி விடும். அந்த நேரத்தில், மூச்சுத் திணறல், நெஞ்சுவலி, வலிப்பு போன்றவை ஏற்படலாம். 

அது போன்ற நேர ங்களில் உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்...’’இடித்துக் கொள்ளா மலும் காயம் படாமலும் கூட ஒருவருக்கு ரத்தக்கட்டு ஏற்படுவ தற்கான வாய்ப்புகள் உண்டு'
Tags:
Privacy and cookie settings