மதனை சுற்றி வளைத்த நான்கு பெண்கள் !

6 மாதங்கள் தலைமறைவாக இருந்த மதனை திருப்பூரில் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த காலகட்டத்தில் மதனுக்கு 4 பெண்கள் அடைக்கலம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
மதனை சுற்றி வளைத்த நான்கு பெண்கள் !
அதோடு சில ஐ.பி.எஸ் அதிகாரி களும் மதனுக்கு சில உதவிகளை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.

வேந்தர் மூவிஸ் மதன், கடந்த மே 28ம் தேதி கங்கையில் சென்று சமாதி அடைவதாக கடிதம் எழுதி விட்டு மாயமானார். 

மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக 123 பேர்களிடம் 84 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் மதன், 

அவரது கூட்டாளிகள், சுதிர், ஐ.ஜே.கே மாவட்ட செயலாளர் பாபு மற்றும் எஸ்.ஆர்.எம். நிர்வாகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தின் தலைவர் பச்ச முத்துவும் கைது செய்யப் பட்டார். 
அவர், தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளார். மதன், தொடர் பான அனைத்து வழக்குகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதா கிருஷ்ணன் விசாரித்தார். 

அவரது தலைமையிலான தனிப் படை போலீஸார் மதனை தேடி பல இடங்களுக்குப் பயணித்தனர். 6 மாதங்களுக்குப் பிறகு திருப்பூரில் மதனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதன் ஸ்டைல்

இது குறித்து போலீஸ் உயர திகாரி ஒருவர் கூறுகை யில், "வேந்தர் மூவிஸ் மதன், உயிரோடு இருக்கும் தகவலை மட்டும் நீதி மன்றத்தில் ஆரம்பத்தி லிருந்தே உறுதியாக தெரிவித்து வந்தோம். 

இந்த சமயத்தில் மதன், வடமாநிலத்தில் தலை  மறைவாக இருக்கும் தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்று மதனின் நடவடிக் கைகளை கண்காணித்தோம். 

பெரும்பாலும் மதன், எங்கு சென்றாலும் மாதக் கணக்கில் அவர் தங்கும் நிலை ஏற்பட்டால் வீட்டை லீசுக்கு எடுப்பார். 
இல்லை யெனில் அந்த வீட்டை விலைக்கு வாங்குவார். இது அவரது ஸ்டைல். அது போல தான் உத்தர காண்ட்டில் சரோஜ் ராகவத் என்பவரை நெட் மூலம் மதன் தரப்பு வீடு வாங்க தொடர்பு கொண் டுள்ளது. 

தன்னுடைய பெயரில் தற்போது வீடு வாங்கினால் சிக்கி கொள்வோம் என்று கருதிய மதன், அவரது நெருங்கிய தோழியான ஜூலியட் (பெயர் மாற்றம்) பெயரில் வீடு வாங்கியுள்ளார். 

ஜூலியட்டு க்கு சென்னை அபிராமபுரம். இதற்காக ஜூலியட் உத்தர காண்ட் சென்றுள்ளார். 

அந்த வீட்டின் மதிப்பு 60 லட்சம் ரூபாய். வீடு வாங்கிய தகவல் எங்களுக்கு கிடைத் ததும் அந்த வீட்டை நாங்கள் சுற்றி வளைப் பதற்குள் மதன், அங்கிருந்து மாயமாகி விட்டார். 

இதனால் ஏமாற்றத்துடன் தனிப்படை போலீஸ் டீம் சென்னைக்கு திரும் பியது.

வாட்ஸ்அப் கால்
அடுத்து மதனுக்கு மிகவும் நெருக்க மான சேகர் மூலமே அனைத்து பணம் மற்றும் உதவிகள் அவருக்கு கிடைத் துள்ளது. 

சேகர், கோவை யில் இருக்கி றார். அவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம். சேகரை அவரது செல்போன் நம்பர் மூலம் கண்டு பிடிக்க முயற்சி த்தோம். 

அப்போது அந்த நம்பர், ஒரு பெண்ணின் பெயரில் இருந்த தால் சேகரை கண்டு பிடிக்க முடிய வில்லை. 

ஜூலிய ட்டைப் போல சென்னை போரூரை சேர்ந்த சுதாவும் (மாற்றம்) மதனுக்கு பல வகையில் உதவி செய் துள்ளார். 

இந்த சுதாவும் மதனுடன் வடமாநி லங்களில் சுற்றியு ள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்து ள்ளது. சுதாவின் செல்போன் நம்பரை கண்டு பிடித்து அவர் தொடர்பு கொண்ட நம்பர்களை ஆராய்ந்தோம். 
ஆனால், அதில் எந்த தடயமும் எங்களுக்கு கிடைக்க வில்லை. அப்போது, சுதாவின் போனை பறிமுதல் செய்து வாட்ஸ்அப் காலை ஆய்வு செய்த போது அதிர்ச்சியடைந்தோம். 

மதனுடன், சுதா வாட்ஸ் அப் காலில் பேசியது தெரிய வந்தது. அந்த வாட்ஸ்அப் காலில் சேகருடன் பேசிய விவரம் கிடைத்தது. 

மேலும் மதன் ஒருமுறை பேசிய வருடன் அடுத்த முறை பேசுவது கிடையாது. இது எங்களது விசாரணை அடுத்த கட்டத்துக்கு செல்வதில் சிக்கலை ஏற்படுத் தியது.

'வசீகர' வர்ஷா

இதை யடுத்து சேகர், சுதா ஆகியோரை ரகசியமாக கண்காணி த்தோம். சேகர் மூலம் திருப்பூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்தை சேர்ந்த வர்ஷாவின் வீட்டில் மதன் தங்கி இருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. 
இதனால் எங்களது சந்தேக வளையத்  துக்குள் வர்ஷாவை கொண்டு வந்தோம். வர்ஷா, சினிமா நடிகை போல இருந்தார். மேலும் அவரது வீடும் பங்களா டைப் கொண்டது. 

பெரிய இடம் போல காணப் பட்ட வர்ஷாவிடம் எந்த ஆதாரங் களும் இல்லாமல் எப்படி விசாரிக்க முடியும் முதலில் என்று யோசித் தோம். 

இதற்காக வர்ஷாவின் வீட்டை ரகசியமாக சில நாட்களாக கண் காணித்தோம். வர்ஷாவு க்கும் மதனுக்கும் என்ன சம்பந்தம் என்று விசாரித்தோம். 

அப்போது மதனின் மனைவி வழி உறவினர் வர்ஷா என்று தெரிய வந்தது. இதனால் வர்ஷா விடம் மதன் தொடர்பாக விசாரித்த போது எந்த தகவலை யும் அவர் சொல்ல வில்லை. 

ஆனால், எங்களுக்கு கிடைத்த தகவல் படி வர்ஷா வீட்டில் மதன், தலை மறைவாக இருப்பது உறுதியானது. 
இதையடுத்து வர்ஷா வின் வீட்டை சுற்றி வளைத்து தேடினோம். அப்போது ரகசிய அறையில் பதுங்கி இருந்த மதனை கைது செய்தோம். 

மதன், தங்கி இருந்த ரகசிய அறையில் ஏ.சி. டி.வி. கழிவறை என அனைத்து வசதிகளும் இருந்தது. அந்த அறை அவருக்காகவே சமீபத்தில் கட்டப் பட்டுள்ளது என்ற தகவலும் தெரிந்தது. 
மதனை சுற்றி வளைத்த நான்கு பெண்கள் !
வர்ஷாவின் வீடு கிராமம் என்பதால் எந்த சந்தேகமும் பக்கத்து வீட்டில் உள்ளவர் களுக்கு கூட ஏற்பட வில்லை. 

இவ்வாறு மதனுக்கு உதவிய வர்களில் பெரும்பா லானவர்கள் அவரது தோழிகள். சில ஆண் நண்பர்களும் இருக்கி றார்கள். 

அவர்களின் பட்டியலை தயாரித்துள்ளோம். விரைவில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், மதனுக்கு உதவி செய்தவர்களின் பட்டியல் அவரது தோழிகள் 4 பேர் உள்ளனர். மேலும் ஆண் நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள். 

பெண்களில் ஒருவர் கேரளா வை சேர்ந்தவர். அவர், மதனை சேட்டா என்று தான் அழைப்பார். அவர்க ளிடம் விசாரணை நடத்தி வருகிறோம். 
இந்த சமயத்தில் மதனுக்கு உதவி செய்ததில் சில போலீஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. 

ஏனெனில் மதன் மூலம் அந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தில் மருத்துவ, இன்ஜினி யரிங் படிப்பிற் கான சீட்களை பெற்று ள்ளனர். 

அந்த சீட்களை பெற்றதில் ஐ.பி.எஸ் அதிகாரிக ளுக்கும் மதனுக்கும் நெருங்கிய பழக்கம் இருந்தது. 

அவர்களும் மதனுக்கு உதவிய தால் அவர்களி டமும் விசாரிக்க போலீஸ் உயரதி காரிகள் ஆலோசனை நடத்தி வருகின் றனர்" என்றனர்.
Tags:
Privacy and cookie settings