பெருமதிப்பு வாய்ந்த தங்கம் உருவான கதை !

தங்கம் விண்ணிலிருந்து வந்தது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன என்று விஞ்ஞா னிகள் கூறி யுள்ளனர்.
பெருமதிப்பு வாய்ந்த தங்கம் உருவான கதை  !
அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பது தான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி. 
 
இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி யாளர்களே தெரிவித்துள்ளனர்.

கீரீன் லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் படிமங் களில் இருந்த ஐசோடோ ப்புகள், பூமியி லிருந்து உருவான ஐசோ டோப்புகளி லிருந்து தெளிவாக மாறு பட்டிருந் ததை பிரிஸ்டல் பல்கலை க்கழக ஆய்வாள ர்கள் கண்டறிந்து ள்ளனர்.
எனவே தங்களது இந்தக் கண்டு பிடிப்பானது, நாம் வாழும் பூமி சுமார் இருநூறு மில்லியன் வருடங்கள் பழமை யானதாக இருக்கும் போது, அண்ட வெளியிலிருந்து வந்த மிகப் பெரிய எரிகற்களின் மோதல் காரணமாக, 

இன்று நாம் பயன்படுத்தும் பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிம ங்கள் பூமியை வந்தடை ந்தன என்கிற கோட் பாட்டை உறுதி படுத்து கின்றது என்று அந்த ஆய்வா ளர்கள் தெரிவித் துள்ளனர்.

மண்ணு டன் கலந் துள்ள தங்கத் துகள்கள் பூமியின் ஆரம்ப காலங்க ளில் இந்த மோதல்கள் காரணமாக கொதித்து உருகிய நிலையில் இருந்த புவியின் மையப் பகுதிக்குள் 
 
தங்கம் மற்றும் இதர பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனி மங்கள் மூழ்கின என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் நாம் நமது திருமண மோதிரங்கள் போன்ற வற்றில் பயன் படுத்தும் தங்க மானது எப்படி உருவானது என்கிற கதை இன்னமும் ஆச்சரிய மாக உள்ளது.

இந்தப் பிரபஞ் சத்தில் இது வரை பார்த்தி ராத வகையில், அனுவின் ஒரு உட்கரு வான நியூட்ரா ன்களின் மிகச் சக்தி வாய்ந்த மோதல் களிலேயே நாம் இன்று பயன் படுத்தும் தங்கம் உருவானது என்று விஞ்ஞா னிகள் நம்புகி றார்கள்..
Tags:
Privacy and cookie settings