நைஜீரிய நாட்டில் போக்கோ ஹரம் பயங்கர வாதிகளிடம் இருந்து பல முயற்சிகளுக்கு பிறகு தப்பிய 17 வயது இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி யுள்ளது.
நைஜீரியா வின் போர்னோ மாகாண த்தில் இருக்கும் இவரது வீட்டில் இருந்து 2 ஆண்டு களுக்கு முன்பு இந்த இளம்பெண் வலுக் கட்டாய மாக கடத்திச் செல்லப் பட்டார்.
பயங்கர வாதிகளால் கடத்தி செல்லப் பட்டு பிறகு அந்த கூட்டத்தில் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொண்டதாக அந்த இளம்பெண் தெரிவித் துள்ளார்.
அதன் பிறகு தான் தன் வாழ்க்கையில் பல கொடுமைகள் அரங்கேற் யதாக அவர் கண் கலங்கி விவரித்தார்.
திருமணத்திற்கு முன்பு ஒரு வேலைக்காரி போன்று நடத்தப் பட்டதாகவும், அனைத்து பணி களையும் செய்து முடித்த பிறகும் ஓய்வுக்கு நேரம் இருக்காது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் பயங்கரவாதி களுக்கு உணவு சமைத்து கொடுக்க வேண்டும், அவர்கள் சாப்பிட்டதும் அனைத்து எச்சில் பாத்திரங்களையும் சுத்தப் படுத்தி விட்டு, அதன் பின்னரே உணவு சாப்பிட முடியும் என அவர் கூறினார்.
திருமணத்திற்கு பிறகு கணவருக்கு மட்டும் பணி விடை செய்தால் போதும் என்று கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகே கொடுமை கள் தொடங்கியது என்றார்.
அந்த நபரை திருமணம் செய்து கொள்ள தனக்கு விருப்பம் இல்லை என்ற போதிலும் தாம் கட்டாயப் படுத்தப் பட்டதாக கூறிய அவர்,
அந்த நபர் தொடர்ந்து தன்னை சித்திர வதைக்கு ஆளாக்கி யதாகவும், பாலுறவு க்கு மறுப்பு தெரிவித்தப் போதெல் லாம் தன்னை வன்பு ணர்வுக்கு ஆளாக் கினார் என்றார்.
மேலும் போக்கோ ஹரம் பயங்கர வாதிகளால் தண்டிக்கப் படும் கொடூர நிகழ்வு களை எல்லாம் தன்னை பார்க்க நிர்பந்தி த்ததாக குறிப் பிட்டார்.