நிர்வாண ஆட்டத்தால் நிலநடுக்கம்... பெண் கைது !

மலேசிய மக்கள் புனிதமாக கருதும் கினபாலு மலைப் பகுதியில் நிர்வாண ஆட்டம் போட்டு கொண்டாடியதால் மலை சினம் கொண்டு, அதனால் நிலநடுக்கம் ஏற்பட்ட தாக கூறி வந்த புகாரைத் தொடர்ந்து,
நிர்வாண ஆட்டத்தால் நிலநடுக்கம்.. பெண் கைது !
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உள்பட சிலரை மலேசிய போலீஸார் கைது செய்து ள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது. 

கினபாலு மலைப் பகுதியில் மே 30ம் தேதி நில நடுக்கம் ஏற்பட்டது. 5.9 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்திற்கு 16 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கு நிர்வாண ஆட்டம் போட்டு கேளிக்கைகளை நடத்தியதே காரணம் என சர்ச்சை வெடித்தது.

இது தொடர்பாக சமூக வலை தளங்களி லும் மலேசிய மக்கள், அந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக ளுக்கு கண்டனம் தெரிவித்து போஸ்ட் போட ஆரம்பி த்தனர். 

இதை யடுத்து 24 வயதான இருக்கக் கூடிய இங்கிலாந்து இளம் பெண் எலியனார் ஹாக்கின்ஸ், 2 கனடா நாட்டு சகோத ரர்கள், ஒரு டச்சுப் பெண் ஆகியோரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். 
இவர்கள் அந்த மலைப் பகுதியில் மேலாடை இல்லாமல் கொண்டாட் டங்களில் ஈடுபட்டி ருந்தனர். அதிலும் இங்கி லாந்துப் பெண் நிர்வாண மாகவும் ஆடி யுள்ளார். 

இது குறித்து சரவாக் துணை முதல்வர் டான் ஸ்ரீ ஆல்பிரட் ஜபு கூறுகையில், அப்பகுதி பூர்வீக மக்கள், 

இந்த வெளிநாட் டினரின் செயல் காரண மாக மலை பாதிக்கப ப்ட்டு, சினம் கொண்ட தாகவும், அதனால் தான் நில நடுக்கம் ஏற்பட்ட தாகவும் கருதுகி றார்கள். 

இது தொடர்பாக வந்த புகாரைத் தொடர்ந்தே தற்போது அனைவரும் கைது செய்யப் பட்டுள்ளனர் என்றார். தவா விமான நிலைய த்தில் வைத்து இங்கிலாந்துப் பெண் கைது செய்யப் பட்டார். 

மற்றவர் கள் அவர்க ளாகவே சரணடைந் தனராம். கைதான அனை வரையும் நான்கு நாள் காவலில் வைக்க கோர்ட் உத்த ரவிட்டு ள்ளது. 
அவர்கள் "குற்றம்" இழைத்தது நிரூபண மானால், அதிகபட்சம் 3 மாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப் படுமாம். 

யுனெஸ் கோவின் பாரம் பரியச் சின்னத்தில் ஒன்றான கினபாலு மலைக்கு வரும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் மத, கலா ச்சார நம்பிக்கைகள், 

பழக்க வழக்கங்களுக்கு மரியாதை சேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சரவாக் துணை முதல்வர் வேண்டு கோள் விடுத் துள்ளார்.

10 எருமையைக் கொடுத் தால் விடுதலை 

இதற் கிடையே, சம்பந்தப் பட்ட சுற்றுலாப் பயணி களை உள்ளூர் பழங்குடி யினத் தலைவர் திண்டரமா அமன் சீராம் சிம்புனா என்பவர் நேரில் போய்ப் பார்த்தார். 
அவர்களிடம், எங்களுக்கு 10 எருமை மாடுகளை நீங்கள் அபராதமாக தர வேண்டும்.  அப்படி செய்தால் உங்க ளுக்கு விடுதலை கிடைக்கும். இல்லா விட்டால் 3 மாதம் சிறையில் இருக்க வேண்டியது தான் என்று கூறி யுள்ளார். 

அந்த பத்து எருமை மாடு களும் ஒன்று ஆணாக இருக்க வேண்டும் அல்லது பெண்ணாக இருக்க வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்து ள்ளாராம்.
Tags:
Privacy and cookie settings