ஜமாத்தை விட்டு ஒதுக்கியதாக வழக்கு.. வக்பு வாரியம் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு !

வக்கீல் குடும்பத் தினரை ஜமாத்தை விட்டு ஒதுக்கி வைத்து ள்ளதாக தொடர்ந்த வழக்கில் வக்பு வாரிய தலைமை செயல் அதிகாரி பதிலளிக்க, மதுரை ஐகோர்ட்டு உத்தர விட்டு ள்ளது.
ஐகோர்ட்டில் மனு

மதுரை மாவட்டம் பேரை யூரைச் சேர்ந்தவர் ஜாபர் அலி, வக்கீல். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந் ததாவது:–

நான், பேரையூர் முஸ்லிம் ஜமாத் உறுப்பி னராக இருந்து வருகி றேன். ஜமாத் தலைவ ராக சர்புதீன் என்பவர் இருந்து வருகிறார். 
இவர், சிவகங்கை மாவட்ட கலெக் டரின் நேர்முக உதவியா ளராக பணி யாற்றி ஓய்வு பெற்றவர். என் தந்தை காதர் மைதீன், சித்தப்பா நயினார் முகமது ஆகியோர் ஜமாத் வரவு, செலவு கணக்கு களை கேட்டனர்.

இதற்காக அவர்கள் இரு வரையும் அடிப்படை உறுப்பி னரில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவே ற்றினர். மேலும் என் தந்தை மற்றும் சித்தப்பா வை ஜமாத்தை விட்டு ஒதுக்கி வைத்தனர். 

மேலும், எங்கள் குடும்ப உறுப்பி னர்களிடம் ஜமாத்தை சேர்ந்த யாரும் பேசக் கூடாது என்றும், தொழுகை செய்வதற் காக எங்கள் குடும்பத் தினர் மசூதிக் குள் செல்லக் கூடாது என்றும் தெரிவித் தனர்.
சுற்றறிக்கை

எங்கள் குடும்ப சொத்துக் களை ஜமாத் வளர்ச்சி க்காக ஏற்கனவே கொடுத் துள்ளோம். பக்ரீத் பண்டிகை யின்போது குர்பானி கொடுக்க ப்படும் ஆட்டின் தோலை ஜமாத்து க்கு கொடுப்பது வழக்கம். 
நீங்க டிஷ்யுல தான் முகம் துடைப்பீங்களா? படிங்க !
அதன் படி எங்கள் வீட்டில் குர்பானி கொடுத்த ஆட்டின் தோலை ஜமாத்தில் கொடுத்த போது அங்கிருந் தவர்கள் வாங்க மறுத் தனர்.

காரணம் கேட்ட போது எங்கள் குடும்பத் தினரை ஜமாத்தை விட்டு ஒதுக்கி வைத்திரு ப்பதால் ஆட்டின் தோலை வாங்க முடியாது என்று கூறினர். 

ஜமாத்தை விட்டு ஒதுக்கி வைப்பது போன்ற செயல் களில் ஈடுபடக் கூடாது என்று தமிழ்நாடு வக்பு வாரியம் 2008–ம் ஆண்டு வெளியிட்ட சுற்றறிக் கையில் கூறப்ப ட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்

என்னை யும், எங்கள் குடும்பத்தி னரையும் ஜமாத்தை விட்டு ஒதுக்கி வைத்திரு ப்பதன் மூலம் எங்களது அடிப்படை உரிமை பாதிக்கப் பட்டுள்ளது. 

எனவே, எங்களை ஜமாத்தை விட்டு ஒதுக்கி வைத்த ஜமாத் தலைவர் சர்புதீன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் 

என்று சிறுபான் மையினர் நலத் துறை செயலாளர், தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை செயல் அதிகாரி, மதுரை மண்டல கண்கா ணிப்பாளர் ஆகியோருக்கு 17.9.2016 அன்று மனு கொடுத் தேன்.
உங்கள் தங்க நகைகள் தொலைந்து போகாமல் இருக்க !
அவர்கள் எந்த நடவடிக் கையும் எடுக்க வில்லை. 

எனவே, நான் கொடுத்த புகார் மனு அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க தமிழ் நாடு வக்பு வாரிய தலைமை செயல் அதிகாரி க்கு உத்தர விட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது.

நோட்டீசு
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்னி லையில் விசாரணை க்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்த மாக தமிழக அரசின் சிறு பான்மை யினர் நலத் துறை செயலாளர், 

தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை செயல் அதிகாரி, மதுரை மண்டல கண்காணி ப்பாளர், பேரையூர் முஸ்லிம் ஜமாத் தலைவர் சர்புதீன் ஆகியோர் பதிலளிக்க நோட்டீசு அனுப்ப உத்தர விட்டார்.
Tags:
Privacy and cookie settings