கடல் ஆக்டோபஸ் கொடுத்த ஐடியா !

ஆக்டோபஸின் கரங்களை முன் மாதிரியாக வைத்து, கொரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், எதிலும் வலுவாக ஒட்டிக் கொள்ளும் அட்டையை ஆய்வுக் கூடத்தில் உருவாக்கி யிருக்கின்றனர். 
இந்த அட்டை, தேவையான இடத்தில் விரைவாக, வலுவாக ஒட்டிக் கொள்ளும். அப்படி ஒட்டிய அட்டை யை விரைவில் அகற்றி விடவும் முடியும். கடலில் திளைக்கும் ஆக்டோபஸின் கரங்கள் மிகவும் வலுவானவை.

அதற்குக் காரணம், அதன் வளைந்து நெளியும் கரங்களில் உள்ள சிமிழ் மூடி போன்ற அமைப்புகள் தான். 

ஆக்டோபஸ் நினைத்தபடி அந்த குழிவின் அளவை அதிகரிக்க முடிவதால், குழிவுகளுக்குள் உறிஞ்சும் விசை உண்டாகிறது. குழிவு பெரிதாக இருந்தால், உறிஞ்சு விசை அதிகமாக இருக்கும். 

கொரிய அறிவியல் தொழில்நுட்ப நிலையம் மற்றும் உல்சான் தேசிய அறிவியல் தொழில்நுட்ப நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கிய,
செயற்கை ஆக்டோபஸ் அட்டைக்கு, 'பாலிடை மெதைல் சிலோக்சேன்' என்ற ரப்பரைப் போன்ற பொருளை பயன்படுத்தி உள்ளனர். அறைச் சூட்டில் இந்தப் பொருள் எந்த வினையும் புரியாமல் இயல்பாக இருக்கும். 

ஆனால், வெப்பத்தை, 32 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்த்தும் போது சுருங்க ஆரம்பிக்கும். 

அந்தப் பொருளிலுள்ள நுண் துளைகள் திறந்து, ஆக்டோபஸின் குழிவான கரங்களைப் போல செயல்பட்டு ஒரு பரப்பை உறிஞ்சி கெட்டியாக பிடித்துக் கொள்ளும். 

மருத்துவ துறை உட்பட பல துறைகளில் செயற்கை ஆக்டோபஸ் அட்டைகள் பயன்படும் என்று கொரிய விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது குறித்த ஆய்வுக் கட்டுரை, 'அட்வான்ஸ்ட் மெட்டீரியல்ஸ் இதழில் வெளி வந்துள்ளது.
Tags:
Privacy and cookie settings