தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிகைகள் அமர்ந்து கொண்டு மற்றவர்களின் குடும்பப் பிரச்சினையை அலசி ஆராய்வது எனக்கு ஆரோக்கிய மானதாகத் தெரியவில்லை என நடிகை ஸ்ரீபிரியா விமர்சித்துள்ளார்.
80களில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. ரஜினி, கமலுடன் அதிக படங்களில் நடித்த அவர், சின்னத் திரையிலும் விக்ர மாதித்தன், சின்னப் பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட பிரபல தொடர் களிலும் நடித்துள்ளார்.
அதோடு, மாலினி 22 பாளையங் கோட்டை, திரிஷ்யம் தெலுங்கு ரீமேக் உள்ளிட்ட படங் களையும் அவர் இயக்கியுள்ளார்.
ஸ்ரீபிரியா கண்டனம்...
இந்நிலையில், தொலைக் காட்சிகளில் மக்கள் பிரச்சினை களைப் பேசித் தீர்க்கும் நிகழ்ச் சிகளில் நடிகைகள் கலந்து கொண்டு தீர்ப்பு வழங்குவது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியு ள்ளார் ஸ்ரீபிரியா.
சட்டம், நீதிமன்றம் உள்ளது...
இது தொடர்பாக அவர் வெளியி ட்டுள்ள டிவிட்டர் பதிவில், "மக்கள் பிரச்சினை களைத் தீர்க்க நீதிமன்றம் உள்ளது. குடும்பப் பிரச்சினைகளுக்கு என பல்வேறு சட்டப் பிரிவுகளும் உள்ளன.
அப்படி இருக்கை யில் அவர்கள் எதற்காக தங்கள் பிரச்சினை களுக்குத் தீர்வு தேடி சேனல் களுக்கு வர வேண்டும்.
நாட்டாமை களாகும் நடிகைகள்...
இந்த நிகழ்ச்சி களுக்கு தீர்ப்பு சொல்வ தற்கு நீதிபதி போல் நடிகை கள் பங்கேற் கின்றனர். இதை நாம் நிறுத்தியே ஆக வேண்டும்.
நீதிபதி மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பு என்பது தனிக்கலை. தயவு செய்து அதனை நாம் முறைப் படி கற்க வேண்டும்" என வலி யுறுத்தி யுள்ளார்.
லட்சுமி ராம கிருஷ்ணன்...
சமீபகாலமாக இவ்வாறு தொலைக் காட்சியில் மக்கள் பிரச்சினை களைப் பேசித் தீர்க்கும் நிகழ்ச்சி களில் கலந்து கொண்டு நடிகைகள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.
ஜீ தமிழில் ஒளிபரப் பாகும் சொல்வ தெல்லாம் உண்மை நிகழ்ச்சி யில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேசுவதை வைத்து பல்வேறு நிகழ்ச் சிகளில் கிண்டல் செய்கின்றனர். இதற்கு அவர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்.
கீதா, ஊர்வசி...
இதே போல், தெலுங்கு தொலைக் காட்சி நிகழ்ச்சியில் ஓரினச் சேர்க்கையா ளர்களை தரக்குறைவாகப் பேசி நடிகை கீதாவும்,
மலையாளத் தொலைக் காட்சியில் ஆண் ஒருவரைத் தரக்குறைவாகப் பேசி நடிகை ஊர்வசியும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
குஷ்பு...
இது ஒரு புறம் இருக்க, நடிகை குஷ்பு சன் டிவியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில், சமீபத்தில் அடிதடியானது தனிக் கதை.
இந்த சம்பவ ங்களை வைத்து தான் நடிகை ஸ்ரீபிரியா இவ்வாறு தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.