கள்ள நோட்டு கும்பலை குழப்பிய ஆர்.பி.ஐ !

புதிதாக வெளியாகியுள்ள 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை கள்ள நோட்டாக அச்சடிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் பேட்டியளி த்துள்ளார்.
கள்ள நோட்டு கும்பலை குழப்பிய  ஆர்.பி.ஐ !
நாடு முழுக்க ஆங்காங்கு கள்ள நோட்டுகள் பிடிபடு வதாக செய்திகள் வெளி யாகும் நிலையில் அவரது பேட்டி வெளியாகி யுள்ளது. 
அறிமுகம் செய்யப் பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டில் ஜிபிஎஸ் உள்ளது, சிப் உள்ளது என்றெல் லாம் வாட்ஸ்அப்பில் வதந்தி பரவிய போது, உள்ளே ஒரு 'குர்குரே' சிப்ஸ் கூட கிடையாது என 

கூறி வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத் திருந்த ஆர்.பி.ஐ அதன் பிறகு இப்போதுதான் வாய் திறந் துள்ளது.

9 வித்தியா சங்கள்

ஆர்.பி.ஐ அச்சடித் துள்ள 500 ரூபாய் நோட்டிலேயே 9 வித்தியா சங்கள் தென்படும் நிலையில், இதில் கள்ள நோட்டு எப்படி அடிக்க முடியும் என்ற கேலி நோக்கில் உர்ஜித் பட்டேல் கூறியிரு க்கலாம் என்கிறார் கள் நெட்டிசன்கள். 
ஆம்.. நல்ல நோட்டே கள்ள நோட்டு மாதிரி தான் மக்களால் பார்க்கப் பட்டு வருகிறது. மக்கள் மட்டும ல்ல கள்ள நோட்டு கும்பலும், இதில் எதை பிரிண்ட் செய்வது என்று கன்ப்யூஸ் ஆகிப்போய் தான் உள்ளது.

யாருக்கும் தெரிய வில்லை

மக்களை பொறுத் தளவில், முன்பின் அறிமுகம் இல்லாத 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக் களில் மக்கள் எப்படி நல்ல நோட்டா கள்ள நோட்டா என சோதித்து பார்க்க முடியும். அவர்க ளுக்கு எல்லா நோட்டும் ஒன்று தான்.

கலர் ஜெராக்சே அடிச்சிட்டாங்க
கள்ள நோட்டு அடிக்க முடியாது என உர்ஜித் பட்டேல் உணர்ச்சி கரமாக சொல்லும் முன்பே, சாதாரண ஜெராக்ஸ் மெஷினில் 2000 ரூபாய் நோட்டுக் களை கலர் ஜெராக்ஸ் எடுத்த சம்பவத்தை நாடு பார்த்து விட்டது. 

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் அருகே கலர் ஜெராக்ஸ் தாளை கொடுத்து வெங்காயம் வாங்கி சென்ற மர்ம நபரை போலீஸ் இன்னும் வலை வீசி தேடிக் கொண்டு தான் உள்ளது.
வேலூர் பிரியாணி செய்முறை !
 
ஹைதரா பாத்திலும் சம்பவம்

இந்த நிலையில் தான் மற்றொரு அதிர்ச்சி சம்பவ மாக, தெலுங் கானா மாநிலம் ஐதராபாத், இப்ராகிம் பட்டணம் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் கள்ள நோட்டு கும்பல் பிடிபட்டது. 
அந்த கும்பலிடம் போலீசார் விசாரித் ததில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப் பட்டதும் கடுமை யான சில்லரை 

மற்றும் பணத் தட்டுப்பாடு ஏற்பட் டதை பயன் படுத்திக் கொண்டு முதலில் சிறிய தொகைக் கான ரூபாய் நோட்டு களை கலர் ஜெராக்ஸ் எடுத்து 

மார்க்கெட் டுகளில் புழக்க த்தில் விட்டதும், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வெளி யானதும் அந்த கும்பல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டிலும் கள்ள நோட்டு களை அச்சடித் ததும் தெரிய வந்தது.

கலர் ஜெராக்ஸ்
ஹைதராபாதி நிஜாமி பிரியாணி செய்முறை !
அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 310 மதிப்புள்ள 2 ஆயிரம், 100, 50, 20, 10 ரூபாய் கள்ள நோட்டுகள்,  2 கலர் ஜெராக்ஸ் இயந்தி ரங்கள், ரொக்கம் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

அந்த கும்பலிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி றார்கள். பிரிண்ட் செய்தால் குழப்பம் வருவதால் தான், அவர்கள் ஜெராக்ஸ் எடுத்து விட்டார்கள் போலும். இதை யெல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பது ஆபீசர்?
Tags:
Privacy and cookie settings