நம்மூரில் ஒரு பள்ளம் ஏற்பட்டால் மாதக்கணக்கில் ஏன் வருடக் கணக்கில் கூட அதை சரி செய்ய காலம் எடுத்து கொண்டிருக்கும் நிலையில் ஜப்பானில்
சமீபத்தில் ஏற்பட்ட 98 அடி அகல பள்ளத்தை ஒரே வாரத்தில் சரிசெய்து இன்று முதல் போக்கு வரத்தும் அந்த பகுதியில் தொடங்கி யுள்ளது.
ஜப்பானில் உள்ள Fukuoka என்ற பகுதியில் கடந்த வாரம் திடீரென பிசியான சாலை ஒன்றில் மிகப் பெரிய பள்ளம் தோன்றியது.
98 அடி அகலம் கொண்ட இந்த பள்ளத்தை மூட, போர்க்கால அடிப்படை யில் பணிகள் முடுக்கி விடப் பட்டன,
இந்நிலை யில் ஜப்பானிய எஞ்சி னியர்கள் ஒரே வாரத்தில் இந்த பள்ளத்தை வெற்றி கரமாக மூடி, இன்று முதல் போக்கு வரத்துக்கு அனுமதியும் கொடுத்தனர்.