எம்.என்.சி கம்பெனிகளுக்கு சச்சின் என்ன சொல்கிறார் !

பெரிய நிறுவன ங்கள், விளை யாட்டு வீரர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று யோசனை தெரிவித் துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்ப வான், சச்சின் டெண்டுல்கர்.  
எம்.என்.சி கம்பெனிகளுக்கு சச்சின் என்ன சொல்கிறார் !
மும்பை காவல் துறை கிரிக்கெட் தொடரின் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது, சச்சின் இவ்வாறு தெரிவித்தார். 

மும்பை கிரிக்கெட் சங்க அணியில் முன்பு குறைந்த அளவிலான வீரர்கள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் இருந்தனர்.

இப்போது, நிலைமை மாறியுள்ளது. எனவே வீரர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. 

எனவே, இந்தக் காலத்தில், விளையாட்டு வீரர்களுக்கு பொருளா தார உத்தரவாத்தை அளிக்க வேண்டியது அவசியமா கியுள்ளது. 

பள்ளி அளவிலான அணிகளில் 14 வீரர்களைச் சேர்க்க வேண்டும் என்ற எனது ஆலோசனையை மும்பை கிரிக்கெட் சங்கம் ஏற்றிருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 
ஸ்பின்னு க்கு சாதகமான பிட்ச் அதிகம் கொண்ட தேசம் நம்முடையது. 

எனவே வேகப்பந்து வீச்சாளர்கள் எண்ணி க்கையை ஒவ்வொரு உள்ளூர் அணியுமே குறைத்துக் கொள்கிறது. இதனால் அந்த வீரர்களின் எதிர் காலமும் கேள்விக் குறியாகிறது. 

இந்தியாவில் இருக்கும் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களிலும், பன்னாட்டு எம்.என்.சி. நிறுவனங்களிலும் விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். 
இதன் மூலம் அவர்களுக்கு அவசிய மான பொருளாதார உத்தர வாதத்தை கொடுக்க முடியும். இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings