ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ள சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால்,
தனது இரண்டு கால் மூட்டுக் களிலும் பிரச்சினை ஏற்பட் டுள்ள தாகவும், இதற்கு சிகிச்சை எடுக்க வெளிநாடு போக வேண்டும்,
எனவே பாஸ்போர் ட்டை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி சென்னை அமர்வு நீதிமன்ற த்தில் மனு செய் துள்ளார்.
சென்னை வேளச் சேரியில் வசித்து வந்தவர் ஜீவஜோதி. இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார்.
இவர் கொடைக் கானலில் வைத்துக் கொலை செய்யப் பட்டு உடலை மலையில் போட்டு விட்டனர். இந்த பரபரப்புக் கொலை வழக்கில், ராஜகோபால் உள்ளிட் டோர் கைது செய்யப் பட்டனர்.
இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்ட னையும், ரூ. 30 லட்சம் அபராதமும் விதிக்கப் பட்டது. இதை சில மாதங் களுக்கு முன்பு சென்னை உயர்நீதி மன்றமும் உறுதி செய்தது.
இதை யடுத்து ராஜகோபால் மீண்டும் கைது செய்யப் பட்டார். பின்னர் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் அவர் அப்பீல் செய்து, ஜாமீனில் வெளியே வந்தார்.
தற்போது தனது பாஸ் போர்ட்டை ஒப்படை க்கக் கோரி சென்னை 4வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற த்தில் ராஜகோபால் ஒரு மனு தாக்கல் செய்து ள்ளார்.
அதில், என் மீதான வழக்கில் அளிக்க ப்பட்ட தண்டனைத் தீர்ப்பை உயர்நீதி மன்றம் உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் நான் மேல் முறையீடு செய்து ள்ளேன்.
இந்த நிலையில் எனக்கு உடல் சுகவீனம் ஏற்பட் டுள்ளது. எனது 2 கால் மூட்டு களிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா அல்லது ஆஸ்திரேலியா நாட்டில் அறுவை சிகிச்சை செய்தால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று மருத்துவர்கள் ஆலோ சனை வழங்கி யுள்ளனர்.
ஆனால் என் மீதான வழக்கு தொடர் பாக எனது பாஸ்போர்ட் முடக்க ப்பட்டு விட்டது. அதை புதுப்பிப் பதற்காக முன்பு மனு தாக்கல் செய்திருந்தேன்.
சில நிபந்தனைகளை விதித்து பாஸ்போர்ட்டை கோர்ட்டு எனக்கு வழங்கியது. நிபந்தனை களின்படி, பாஸ்போர்ட்டை புதுப்பித்து விட்டு மீண்டும் கோர்ட்டில் அதை ஒப்படைத்து விட்டேன்.
மீண்டும் பாஸ்போர்ட் தேவைப்பட்டால் கோர்ட்டின் அனுமதி யோடு பெறலாம் என்றும் முன்பு உத்தர விடப்பட்டது.
நான் மிகப்பெரிய நிறுவன ங்களை நடத்தி வருகிறேன். என்னை நம்பி ஆயிரக் கணக்கான ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் நலனுக் காக நான் எனது உடல்நலனை பாதுகாக்க வேண்டியது அவசியம்.
எனவே நான் வெளிநாடு சென்று மருத்துவ சிகிச்சை பெறுவ தற்காக எனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தர விட வேண்டும்.
சிகிச்சை முடிந்த பிறகு நான் அதை மீண்டும் கோர்ட்டில் ஒப்படைத்து விடுவேன் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் ராஜகோபா லுக்கு பாஸ் போர்ட்டைத் தர ஜீவஜோதி கணவர் வழக்கை விசாரித்த வேளச்சேரி காவல் நிலையம் சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை வருகிற 27ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட் டுள்ளது.
இந்த வழக்கு தவிர சில மாதங்களுக்கு முன்பு ராஜகோபால் மற்றும் குடும்பத்தினர் மீது நிலத்தை ஆக்கிர மித்ததாக ஒரு புகார் எழுந்தது என்பது நினைவி ருக்கலாம்.