கோவையில் செருப்பு தைத்த ஸ்மிருதி இரானி !

ஈஷா யோகா மையத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்திருந்த மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, சாலையோர செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் செருப்பு தைத்து போட்டுக் கொண்டார்.
கோவையில் செருப்பு தைத்த ஸ்மிருதி !

அப்போது கூலியாக கொடுக்க சில்லரை இல்லாமல் திண்டாடினார். டெல்லியி லிருந்து, கோவைக்கு, 12:30 மணிக்கு, விமானம் மூலம் வந்த ஸ்மிருதி இரானி, 2:30 மணிக்கு, ஈஷா யோகா மையத்தில், நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.

அவர் போகும் வழியில் தான் தனது செருப்பு அறுந்து போயிருந்ததை கவனிதார். எனவே, பேரூர் பகுதியில், சாலையோர செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரை அணுகினார் இரானி. 

தனது செருப்பை தைத்துக் கொடுக்குமாறு இரானி கேட்டுக் கொண்டார். தொழிலாளியும் செருப்பை தைத்துக் கொடுத்தார். ஆனால் அவருக்கு கொடுக்க ரூ.100 நோட்டு தான் இரானியிடம் இருந்தது. 

ஆனால் தொழிலாளியிடம் திருப்பித் தர சில்லரை இல்லை. எனவே, இரண்டு தையலாக போட்டுத் தருகிறேன் என கூறி, செருப்புக்கு ஸ்ட்டிராங்காக தையல் போட்டார் அந்த தொழிலாளி. இதன் பிறகு 100 நோட்டை கொடுத்து விட்டு கிளம்பினார் இரானி.

இந்த சம்பவத்தின் போது, கோவை பாஜக பிரமுகர், வானதி சீனிவாசன் உடனிருந்தார். பாஜக தொண்டர்கள் இந்த காட்சியை செல்போனில் கிளிக்கினர். மத்திய அமைச்சர் எளிமையாக செயல்பட்டதாக அவர்கள் பாராட் டினர். 

சிலரோ அமைச்சர் விளம்பரத்திற்காக இவ்வாறு செய்திருப்பார் எனவும் விமர்சனம் செய்தனர். இருப்பினும் இரானியையும் சில்லரை தட்டுப்பாடு பிரச்சினை எட்டியுள்ளது என்பது உண்மை தான்.
Tags:
Privacy and cookie settings