க்யூல நின்னவர் தான் இராணுவ வீரர் !

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு களைத் திரும்பப் பெறும் பிரதமர் நரேந்திர மோடி யின் திட்டம் நாடு முழுதும் ஒரு தரப்பி னரிடம் வரவே ற்பைப் பெற்றாலும், இன்னொரு தரப்பினரிடம் எதிர்ப் பையும் கிளப்பி உள்ளது.
க்யூல நின்னவர் தான் இராணுவ வீரர் !
டிஜிட்டல் முறையில் பணப் பரிவர் த்தனை மேற்கொ ள்ளும் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள திட்டம், ஏ.டி.எம் வரிசை களில் பல மணி நேரம் காத்து நிற்கும் மக்க ளிடம் எதிர்ப்பை சம்பாதித் துள்ளது. 

ஏ.டி.எம்-களில் வெறும் 2000 ரூபாய் நோட்டுக் கள் மட்டும் கிடைப் பதால் அதை சில்லறை மாற்ற படாதபாடு படுவதால் ப்ளான் எல்லாம் நல்லாத் தான் இருக்கு.. 

ஆனா ஃபினிஷிங் சரியில்லை யேப்பா! என வடிவேலு பாணியில் பெரும்பாலான மக்கள் நொந்து கொள் கின்றனர். 

மோடியின் இந்த திட்டத் துக்கு ஆதரவு தெரிவிக்கும் பலர், எல்லையில் இராணுவ வீரர்களே கால்கள் கடுகடுக்க நின்று காவல் காக்கும் போது நாட்டு நலனுக்காக சில மணி நேரம் ஏ.டி.எம் வரிசையில் நிற்கக் கூடாதா?’' என்று கேள்விகள் எழுப்பு கின்றனர்.

ஆனால், உண்மையில் முன்னாள் ராணுவ வீரர்களும் தங்கள் பென்ஷன் பணத்தை ஏ.டி.எம்-ல் இருந்து எடுக்க பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகி ன்றனர். 
பஞ்சாப் பின் லூதியா னாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தர்ஷன் தில்லான் ஒரு கடிதம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், அண்மையில் ஏ.டி.எம் வரிசையில் வெகு நேரம் நின்று கொண்டி ருந்தேன். எவ்வளவு நேரம் நிற்பது என நான் கொஞ்சம் சலித்துக் கொண்டேன்.

எனக்குப் பின்னால் இருந்த நபர் ஒருவர், 'ராணுவ வீரர்கள் எல்லை யில் கால் கடுக்க காவல் காக்கும் போது, நான் வரிசை யில் நிற்கக் கூடாதா' எனக் கேட்டார். 

பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக் களை வாபஸ் பெற்ற தற்கு ஆதரவு தெரிவிப்ப வர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். 

நானும் ராணுவ த்தில் இருந்தவன் தான். நீங்கள் சொல்வது போல எல்லையில் 20 வருடங் கள் கால் கடுக்க நின்று ள்ளேன்.
ஆனால் அதற்கான பென்ஷனை எடுக்க தான் பல மணி நேரமாக ஏ.டி.எம் முன்பு வரிசை யில் நிற்கிறேன் என்பதை மறந்து விடாதீர்கள்.

மேலும் தேச பக்தியை ஏ.டி.எம் க்யூவில் நின்று தான் காண்பிக்க வேண்டிய தில்லை. தவறு நடக்கும் போது ஒன்றாகக் கூடி நின்று தவறைச் சுட்டிக் காட்டுவது தான் தேசபக்தி. 

அப்படி தேசபக்தி இருந்தால் எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான ’ஒரே ரேங்க், ஒரே பென்ஷன்’ திட்டத்தை நிறை வேற்றித் தாருங்கள் என்று கூறி யுள்ளார். 

இதை யடுத்து ராணுவ லெப்டின ண்ட்டாக இருந்த தில்லானுக்கு ஆதரவு பெருகி வருகிறது. 
விரைவில் சட்டசபைத் தேர்தலை சந்திக்க உள்ள பஞ்சாப்பில் பி.ஜே.பி-க்கு எதிராகக் களம் இறங்கி இருக்கும் ஆம் ஆத்மி கட்சி, தில்லானை தங்கள் கட்சியில் வந்து இணையு மாறு கோரிக்கை விடுத்துள்ளது. 

வேறு சில கட்சிகளும் அவருக்கு அழைப்பு விடுத் துள்ளன.
Tags:
Privacy and cookie settings