2,000 ரூபாய் நோட்டுகள் விரைவில் வரும் !

இந்தியாவில் விரைவில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட வுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
2,000 ரூபாய் நோட்டுகள் விரைவில் வரும் !
ரூ.500, ரூ.1‌000 போன்ற அதிக மதிப்பிலான கரன்சி நோட்டுகளால் கள்ள நோட்டுகள் மற்றும் கறுப்புப் பணம் அதிகரிப்பதால் அவற்றை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. 

இந்தச் சூழலில், ரூ.2,000 நோட்டு அச்சடிக்கப்பட்டு வருவது முக்கியத்துவம் பெறுகிறது. 

கறுப்புப் பணம் பதுக்கல்கள் அதிகமாக இருக்கும் நிலையில் ரூ.2000 நோட்டு களை திரும்பப் பெற வேண்டும் என்றும் சில அதிகா ரிகள் கோரிக்கை வைத்து ள்ளனர்.

ரிசர்வ் வங்கியின் உத்தர வுப்படி, 2,000 ரூபாய் நோட்டுகள் மைசூரு கரன்சி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வருகிறது. 

இந்த நோட்டுகளை விரைவில் புழக்க த்துக்கு விட ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
இதற்கு முன்பாக, 1938 மற்றும் 1954ஆம் ஆண்டுகளில் 10,000 ரூபாய் நோட்டு களை ரிசர்வ் வங்கி அச்சடித்தது. அவற்றை 1946 மற்றும் 1978ஆம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றது.

அதே போல, நாணயங்களைப் பொறுத்த வரை கடந்த 2011ஆம் ஆண்டு 1 பைசா, 2 பைசா, 3 பைசா, 5 பைசா, 10 பைசா, 20 பைசா, 25 பைசா நாணய ங்களை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings