தமிழக த்தை ஒட்டி யுள்ள வங்கக் கடல் பகுதியில் உருவான வலு வான காற்ற ழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை 8.30 மணியள வில் புயலாக உருவெடுத் துள்ளதாக வும் இது டிசம்பர் 2ஆம் தேதி
அதிகாலை கரையைக் கடக்குமென சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. இந்தப் புயலுக்கு நாடா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச் சேரிக்கு தென் கிழக்கில் சுமார் 730 கிலோ மீட்டர் தொலைவில் இந்தப் புயல் நிலை கொண்டிருக்கிறது.
இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 2ஆம் தேதியன்று அதிகாலை வேதாரண்யம் மற்றும் புதுச்சேரி இடையில் கடலூருக்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.
இதன் காரணமாக தமிழ் நாட்டிலும் புதுச்சேரியிலும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அனேக இடங்களிலும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யுமென எதிர்பார்க்கப் படுகிறது.
படிப்படி யாக இந்த மழை அதிகரித்து தமிழக த்தின் பெரும் பாலான இடங்க ளில் மழை பெய்யக் கூடும்.
கடலோர மாவட்ட ங்களில் ஒரு சில இடங் களில் கன மழையோ மிக கன மழையோ பெய்யக் கூடும்.
சென்னை யில் நாளை அதிகாலை முதல் மழை பெய்யத் துவங்கி, படிப்படி யாக மழையின் அளவு அதிகரிக்கும்.
2004ஆம் ஆண்டில் புயல்களுக்குப் பெயரிட ஆரம்பித்த பிறகு, இது 45வது புயல் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச் சந்திரன் கூறினார்.