திரையரங்கிலும் தேசிய கீதம்.. உச்ச நீதிமன்றம் !

இந்தியாவில் அனைத்து திரையரங்கு களிலும் திரைப் படம் திரையிடப் படுவதற்கு முன், தேசியக் கொடியின் படத்துடன் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.
திரையரங்கிலும் தேசிய கீதம்.. உச்ச நீதிமன்றம் !
தேசிய கீதம் இசைக்கப்படும் போது பார்வை யாளர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்றும் உத்தர விடப்பட் டுள்ளது.

சுதந்திரம் குறித்த தனிப்பட்ட கருத்தை மக்கள் கடைப் பிடிப்பதை விடுத்து உறுதியான தேச பக்தியை உணர வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தெரிவி த்துள்ளது.

இந்த விஷயத்தில் இந்தியாவின் 29 மாநிலங்களும் தனித்தனி சட்டங்களை கடைப் பிடிக்கின்றன.

கடந்த வருடம் தேசிய கீதம் இசைக்க ப்படும் போது எழுந்து நிற்க வேண்டும் என்பதை கட்டாய மாக்கக் கூடாது என்றும் அது குழப்பத்தை உருவாக்கும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

தீர்ப்பில் குறிப்பிடப் பட்டுள்ள பிற தகவல்கள் 

தேசிய கீதம் இசைக்கப் படுவது குறித்து எந்த விளம்பர ஆதாயமும் தேடக்கூடாது, தேசிய கீதத்தின் வரிகள் விரும்பத் தகாத பொருட்கள் மீது அச்சிடப் படக்கூடாது என்றும், 
பிற கலை நிகழ்ச்சிகளின் போது இசைக் கப்படக் கூடாது, அதன் சுருக்கமான பதிப்பையும் இசைக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு வாரக் காலத்திற்குள் இந்த உத்தரவு அமல் படுத்தப்பட வேண்டும் என்று அனைத்து மாநில ங்கள் மற்றும் யூனியன் பிரதேசங் களுக்கு சுற்றறிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings