கியூபா நாட்டு முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவை, அமெரிக்கா விலுள்ள, கியூபா மக்களில் ஒரு பிரிவினர் ஆடிப்பாடி, கொண்டாடி யுள்ளனர்.
புரட்சியாளர்கள் பலருக்குமே, கொடுங் கோலர்கள் என்ற பட்டப் பெயரும் கூடவே வந்து விடுவது உண்டு.
அதே போலத் தான், அமெரிக்க ஏகாதி பத்தியத் திற்கு எதிரான போராட் டத்தில் வெற்றி பெற்ற பிடல் காஸ்ட் ரோவையும், சர்வாதிகாரி என கூறும் மக்களும் உண்டு.
அவரது ஆட்சி காலத்தில் பாதிக்கப் பட்டு அமெரிக் காவில் குடியேறிய கியூப மக்களில் ஒரு பிரிவினர் தான் இன்று கொண்டா ட்டங்கள் நடத்தி யுள்ளனர்.
புளோரிடா மாகாண த்தின் மியாமி பகுதியில் அந்த பகுதி நேரப்படி அதிகாலை 3.55 மணிக் கெல்லாம்,
சாலை களில் கூடிய நூற்றுக்க ணக்கான அமெரிக்க, கியூபர்கள் தங்கள் நாட்டு தேசிய கீதத்தை பாடி மகிழ்ச்சி தெரிவி த்தனர்.
இவர்கள் பெரு வாரியாக வசிக்கும் பகுதி என்பதால் லிட்டில் ஹவானா என்றே அப்பகுதிக்கு பெயரும் வந்தது. ஹவானா என்பது கியூபா நாட்டு தலைநகர் பெயர்.
இனிமேல் கியூபா விடுதலை பெற்று விட்டது என்றெ ல்லாம் அவர்கள் கோஷமிட்டனர். அதே நேரம், கியூபா விலோ, பிடல் காஸ்ட்ரோ மறைவை அந்த நாட்டு மக்கள் பெரும் துக்க தினமாக அனு சரித்தனர்.
Tags: