ஏகாதிபத்திய நலன் களுக்கு எதிராக செயல் பட்டதால், பிடல் காஸ்ட் ரோவை கொல்ல 638 முறை அமெரிக்கா முயன்றது. அவரது முக்கியத்து வத்தை இந்த சம்பவ ங்களே உலகத்திற்கு புடம் போட்டு காட்டும்.
அமெரிக்கா வின் அருகே யுள்ள தீவு நாடான கியூபாவை வெறும் உல்லாச விடுதி போலவே கருதி வந்தனர் அமெரிக்க ஏகாதிப த்தியர்கள்.
சூதாட்ட விடுதிகளுக்காகவும், விபசார அழகிகளை சுவைப்பத ற்காகவும் கியூபாவுக்கு படையெடுத்து வந்தனர்
அமெரிக்க கணவா ன்கள். தங்கள் நாடு, அமெரிக்கா வின் அடிமையாக மாறிப் போய் கிடப்பதை பார்த்து மனம் வெதும்பாதமான முள்ள கியூப மக்களே கிடையாது.
ஆனால் வெதும்புவதால் தீர்வு கிடைக்காது, வெஞ்சுடராய் மாற வேண்டும் என புயலாய் சீறியவர் தான் பிடல் காஸ்ட்ரோ.
அமெரிக்கா தனது கையாட்களை கியூபாவின் அதிபர்களாக நியமித்து, கால்பந்தாக உருட்டி விளை யாடியது.
ஊழல், அடக்கு முறை
ஊழல், அடக்கு முறை கிடைத்த வரை லாபம் என வந்த அதிபர் களும் கொள்ளை யடித்து குதுகலித்தனர்.
இப்படித் தான், 1952ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் கையாள் என கூறப்படும் பாடிஸ்டா கியூச அரசின் அரியணை ஏறினார்.
பாடிஸ்டா அரசில் அடக்கு முறைகளும், ஊழல்களும் நிறைந்தி ருந்தன. மறு பக்கமோ தொழிலாள ர்களும், உழைக்கும் மக்களும் வறுமை யில் உழண் டனர்.
தாய்நாடே முக்கியம்
தாய்நாடே முக்கியம் கொதித் தெழுந்த காஸ்ட்ரோ, மாணவர் பருவத் தினராக இருந்த போதிலும், பாடிஸ்டா அரசின் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த சிறுபடை யோடு சென்றார்.
உயிர் போனால் போகட்டும், தாய் நாட்டு மக்களின் மானமே பெரிது என முழங்கி யபடி, காஸ்ட்ரோ படை முன்னே றியது.
ஆனால், அமெரிக்க அதிநவீன ஆயுதங் களை கைவசம் வைத்தி ருந்த கியூபா ராணுவம் இத்தாக்கு தலை எளிதில் முறியடி த்தது.
வரலாறு என்னை விடுதலை செய்யும்
வரலாறு என்னை விடுதலை செய்யும் காஸ்ட்ரோவை ராணுவ த்தினர் கைது செய்தனர். அப்போது, நீதிமன் றத்தில் பிடல் காஸ்ட்ரோ புரட்சிக ரமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.
இதுவே, பின்னா ளில் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' என்ற பெயரில் வெளி வந்தது. 1955ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி காஸ்ட்ரோ விடுதலை செய்யப் பட்டார்.
அதன் பிறகு கொரில்லா படை தாக்குதல் மூலம், கொஞ்சம் கொஞ் சமாக ஊழல் அரசுக்கு முடிவு கட்டி கியூப மக்களுக்கு சுய மரியாதை யுடன் கூடிய அரசை பரிச ளித்தார் காஸ்ட்ரோ.
அமெரிக்காவின் வெறி
பிடல் காஸ்ட்ரோ வின் எழுச்சியை, அமெரிக்கா வால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. நெஞ்சில் விழுந்த நெருஞ்சி முள்ளாய் குத்தியது அமெரிக்கர்களுக்கு.
குருந்தாடி யுடன், சுருட்டு புகைக்கும் காஸ்ட்ரோ முகம், உலக ஏகாதிபத்தி யத்தின் மொத்த குத்தகைதா ரர்களான அமெரிக் கர்களின் தூக்கத்தை கெடுத்த படியே இருந்தது.
அவரை கொன்று ஒழித்து தங்கள் ரத்த வெறியை தீர்க்க வேண்டும் என துடித்தனர், துவண்டனர்.
குட்டி தீவின் தலைவர்
குட்டி தீவின் தலைவர் 1960க்கு பிறகு பதவி யேற்ற அனைத்து அமெரிக்க அதிபர்களும், இக்கொலை முயற்சியை தங்களது அரசியல் செயல் பாடுகளின் ஒரு பகுதி யாகவே கொண்டி ருந்தனர்.
பொருளா தார வசதியோ, உலகளாவிய அரசியல் அதிகாரமோ இல்லாத ஒரு சிறிய தீவின் தலை வரை கொல்ல வல்லரசு நாடான அமெரிக்கா தொடர்ந்து முயன்றது என்பது அதிர்ச்சி தகவல். ஆனால் அது தான் உண்மை.
ஆனால் தன்னை கொல்ல முயன்ற 10 அமெரிக்க அதிப ர்களின் பதவிக் காலம் முடிந்த பிறகும் அமெரிக்கா வுக்கு அச்சுறுத்த லாகவே விளங் கினார் பிடல் காஸ்ட்ரோ.
இன்று அவரை இயற்கை தான் தன்னோடு ஐக்கியப் படுத்திக் கொண் டுள்ளதே தவிர, அமெரிக்கா வால் அவரின் தாடி முடியை கூட சீண்ட முடிய வில்லை.
கொலை முயற்சி
அமெரிக்கா இது வரையில் 638 முறை ஃபிடல் காஸ்ட் ரோவை கொல்ல செய்ய முயற்சி செய்யதுள்ளது.
அவருக்கு பிடித்தமான சுருட்டு, மருந்து மாத்திரை கள், உணவுப் பொருட்கள் ஆகியவற் றில் விஷம் கலந்து காஸ்ட் ரோவை கொலை செய்ய முயன் றுள்ளது அமெரிக்கா.
இன்னும் சொல்லப் போனால் காஸ்ட்ரோவின் தாடியில் ரசாயன த்தை கலந்து உடலுக்குள் செலுத்தும் முயற்சியும் நடந்தன.
பீரங்கிகளை எதிர்த்து புரட்சி செய்த காஸ்ட்ரோ வுக்கு, இந்த கோழைத்தன தாக்குதல் களை முறியடி ப்பதில் பெரும் சிரமம் இருக்க வில்லை.
இதோ இன்று, அமெரிக்க அதிபர்க ளுக்கும், அதன் உளவு அமைப் புகளும் முகத்தில் கரியை பூசி, அந்த புரட்சி நாயகனுக்கு இயற்கை ஓய்வை கொடுத் துள்ளது.