நடிகர் விஷாலின் அலுவலகம் சில மர்ம நபர்களால் தாக்கப் பட்டது. அவரது அலுவலக வளாகத்தில் நிறுத்தப் பட்டிருந்த காரும் அடித்து நொறுக்கப் பட்டது.
நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் இன்று நடிகர் சங்க வளாகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு பல்வேறு தரப்பி லிருந்து எதிர்ப் புகள் கிளம்பியதைத் தொடர்ந்து பதட்டத் துடனேயே பொதுக் குழு நடந்தது.
எதிர் பார்த்தது போல கலாட் டாவும் நடந்தது. போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி அமளியை அடக்கினர். 5 பேர் காயம டைந்தனர். 230 பேர் கைதும் செய்யப் பட்டனர்.
இந்த கலாட்டா வின் போது நடிகர் கருணா ஸின் காரை சிலர் அடித்து நொறுக் கினர். இதில் காரின் கண்ணாடி உடைந்தது. இந்த நிலை யில் மாலை 5.30 மணிக்கு பொதுக் குழுக் கூட்டம் நடந்து முடிந்தது.
பொதுக் குழுக் கூட்டம் முடிந்த நிலையில் நடிகர் விஷாலின் அலுவ லகம் திடீரென தாக்குதலுக் குள்ளானது. விஷாலின் அலுவலகம் வட பழனியில் உள்ளது.
அந்த அலுவலகத்திற்கு வந்த சில மர்ம நபர்கள் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப் பட்டிருந்த விஷாலின் சொகுசுக் காரையும் அடித்து நொறுக்கினர்.
இந்த தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாக்கியது யார் என்பது குறித்து தெரிய வில்லை. இது குறித்து விஷாலின் மேனேஜர் விருகம் பாக்கம் காவல் நிலைய த்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதில் சரத்குமார் தரப்பு தான் தாக்குத லுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.