பத்தாயிரம் தான் தருவோம்.. அரசு ஊழியர்கள் நிலை !

தமிழக தலைமைச் செயலக ஊழியர்களும், ரூபாய் நோட்டு தட்டுப் பாட்டால் அவதியை சந்தித்துள்ளனர். சென்னை கோட்டையில் இயங்கி வரும், தலைமைச் செயலகத்தில் சுமார் 5 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணியாற்று கிறார்கள். 
இவர்கள் வசதிக்காக பிரத்யேகமாக, தலைமைச் செயலக வளாகத்தில் சில வங்கிகள் இயங்கி வருகின்றன. இன்று ஊதிய நாள் என்பதால், தலைமைச் செயலக ஊழியர்கள் பலரும் வங்கிகளுக்கு படையெடுத்தனர்.

ஏ.டி.எம் களில் நாளொன்றுக்கு, ரூ. 2000 மட்டுமே எடுக்க முடியும் என்பதால், குடும்ப தேவையை பூர்த்தி செய்ய, தலைமைச் செயலக ஊழியர்கள் வங்கிக ளுக்குப் போய் பணத்தை எடுக்க முயன்றனர். 

ஆனால், அங்கே சம்பளப் பணம் முழுவதையும் எடுக்க முடியவில்லை. ஒருவருக்கு அதிக பட்சம் ரூ. 10 ஆயிரம் தான் தரமுடியும் என்று வங்கிகளில் கூறி விட்டனர். 

இதனால் அதிர்ச்சி யடைந்த, தலைமைச் செயலக ஊழியர்கள், தங்கள் சங்க செயலாளர் கணேசனிடம் இது பற்றி முறையிட்டனர். இதை யடுத்து, கணேசன்,  வங்கித் தரப்பினருடன் பேசியுள்ளார். 

கூடுதல் பணம் கொடுக்குமாறு பேசி பார்த்துள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகளோ தங்கள் நிலையே மோசமாக இருப்பதாக கூறி கை விரித்து விட்டனர். தங்களுக்கு ரிசர்வ் வங்கி தந்தது முப்பது லட்சம் தான் என்றும்,

தாங்கள் தான், கூடுதலாக வேண்டும் என்று அடம் பிடித்து 60 லட்ச ரூபாயை வர வழைத்திருக் கிறோம் என்றும் தெரிவித்து ள்ளனர். 

எனவே சம்பள பணத்தை தவணையாக தர வேண்டிய நிலையில் தான் தாங்கள் இருப்பதாக வங்கி அதிகாரிகள் கைவிரிக்க, இப்போது, மத்திய அரசு மீது அதிருப்தி யிலுள்ளார்களாம், 

தலைமைச் செயலக ஊழியர்கள். மாநில விவகாரங்களை கையாளும் தலைமைச் செயலக ஊழியர்க ளுக்கே கடைசில இப்படி, விபூதி அடிச்சிட்டா ங்களே!
Tags:
Privacy and cookie settings