சில அரபு நாடுகளில் தற்போதும் கூட பெண்கள் பாஸ்போர்ட் பெறுவத ற்கும் திருமணம் செய்து கொள் வதற்கும் அல்லது நாட்டை விட்டு செல்வத ற்கும், தங்களின் ஆண் உறவினர் களிடம் அனுமதி பெற வேண்டும்.
ஆண்களால் பாதுகாக் கப்படுவது சட்டரீதியான தல்ல என்ற போதும் பல குடும்பங் களுக்குள் அது தினமும் பழகிப் போன ஒரு செயலா கவே உள்ளது.
பிபிசியின் 100 பெண்கள் தொடரின் ஒரு அங்கமாக, வட ஆப்ரிக்காவைச் சேர்ந்த மூன்று பெண் கார்ட்டூனி ஸ்டுகளை,
அங்கு நிலவும் வழக்கம் எவ்வாறு பெண் களின் வாழ்க் கையை பாதிக்கிறது என்பதை கார்ட் டூனாக வரையும் படி கேட்கப்பட்டது.
எகிப்து
பணக்கார வளைகுடா ஆண்கள் ஏழ்மை யான எகிப்திய கிராமப் பகுதிக ளுக்குச் சென்று இளவயதுப் பெண்களை தற்காலிக திருமணம் செய்வது வழக்க மாக மாறி விட்டது என்று தெரிவிக் கிறார் விருது பெற்ற எகிப்திய கார்ட்டூ னிஸ்ட் டோவா அல் எட்.
பெண்ணு றுப்பு அழித்தல் மற்றும் பாலியல் துன்புறு த்தல் போன்ற விலக்கப் பட்ட சர்ச்சை க்குரிய விஷயங்கள் குறித்து கார்ட்டூன் வரைந்து வசைக்கு ஆளாகிறார் அல் எட்.
எகிப்தில் திருமண வயதான 18 வயதை அடைந்த வுடன் பெண்களை மிகப் பணக்கார வெளி நாட்டு ஆணிற்கு திருமணம் செய்து கொடுக் கின்றனர்.
ஆனால் பல சமயங்களில் இந்த திருமணங்கள் குறுகிய கால ஏற்பாடுக ளாகவே இருக்கின்றன.
ஏனெனில் சிறிது காலத் திற்கு பிறகு அப்பெண் களை திருமணம் செய்து கொண்ட ஆண்கள் அவர்களை நிரா கரித்து விடுகின்றனர்.
ஒரு வெளி நாட்டு நபர் தன்னுடைய வயதை விட 25 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால்
அதற்கு பதிலாக அப்பெண் ணின் குடும்பத் தினருக்கு சுமார் 6000 அமெரிக்க டாலர் களை அவர் தர வேண்டும்.
ஒரு பணக்கார நபருக்கு இந்த தொகை சிறியதாக இருந் தாலும் அதிகரித்து வரும் பொருளா தார நெருக் கடியை சமாளிக்கப் போராடும் ஒரு எகிப்திய குடும்பத் திற்கு இது ஒரு ஊக்கத் தொகை யாகவே உள்ளது.
இந்த சமுதாய த்தின் ஆண்கள் தங்களது பெண்களை விற்று வருகி ன்றனர் ஆனால் அரசும் அதை தட்டிக் கேட்க மறந்து விட்டது என தன் ஆதங்க த்தை தெரிவிக் கிறார் அல் எட்.
துனிஷியா
தான் முதலில் கோட்டோ வியம் (கார்ட்டூன்) வரையத் தொடங்கும் போது தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் வரைந்த தாகவும் எனவே தன்னை ஒரு ஆண் என்றே பலர் கருதினர் என்றும் கூறுகிறார் நடியா கிராரி
அவர்க ளால் ஒரு பெண் ஓவியம் தீட்ட முடியும் என்றும் நகைச் சுவையான கதாப் பாத்திரங் களை படைக்க முடியும் என்றும் நம்ப முடிய வில்லை என தெரிவிக் கிறார் கிராரி.
கிராரியால் வடிவ மைக்கப் பட்ட "வில்லிஸ்" என்னும் பூனை கதா பாத்திரம் கொண்டு சித் தரிக்கப் பட்டுள்ள இந்த கார்ட்டூன் பாலியல் வல்லுற வுக்கு ஆளான
பெண்கள் தங்கள் குடும்பங் களுக்கு வரும் இழிவை தடுப்ப தற்கு தன்னை தாக்கியவ ர்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் கட்டாயம் இருப் பதை கிண்டல் செய்கிறது.
மொராக்கோ
ரிஹாம் எல்ஹவுர், மொராக்கோ நாட்டு செய்தித் தாளில் இடம் பெற்ற முதல் பெண் கார்ட்டூ னிஸ்ட்.
அவர் பெண்கள் தினமான மார்ச் 8 ல் பிறந்த தால் தான் பிறக்கும் போதே பெண்ணிய வாதியாக பிறந்த தாகக் கூறுகிறார்.
மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பல ஆண்கள் சட்டத்தைப் பயன் படுத்தி தங்களது மனை வியை வெளிநாடு களுக்குச் செல்ல விடாமல் தடுப்பதை கருத்தாக கொண்டு இவர் சித்திரம் தீட்டி யுள்ளார்.
மொரோக் கோவில் ஆண் களால் பெண்கள் பாது காக்கப் படும் சட்டம் 2004 ஆம் ஆண்டு மற்றும் 2014 ஆம் ஆண்டு நடை பெற்ற சீர்திருத் தத்தில் மாற்றப் பட்டாலும்
பெண்கள் தங்கள் குழந்தை களை தங்க ளுடன் அழைத்துச் செல்ல ஆண்க ளிடம் சட்ட பூர்வ அனுமதி பெற வேண்டும்.