ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏடிஎம்-களில் நாளொன்றுக்கு ரூ.4,500 எடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், வங்கிகளில் நேரடியாக சென்று வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது.
ஏடிஎம்-மில் இருந்து ஒரு டெபிட் கார்டு மூலம் நாளொன்றுக்கு ரூ.2,500 வரை எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, நாளொன்றுக்கு ரூ.4,500 எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
ஜனவரி 1-ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. அதே நேரத்தில் வங்கிகளில் நேரடியாக சென்று பணம் எடுக்கும் போது வாரத்துக்கு ரூ.24,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது.
ஆனால், இந்த 24,000 ரூபாய், புதிய 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த நவம்பர் 8-ஆம் தேதி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
அதன் பிறகு ஏடிஎம்களில் நாளொன்றுக்கு ரூ.2,000 மட்டுமே எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.