உலகம் முழுவதும் 400 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அணு கடிகாரம் மூலமும் நேரம் கணக்கிடப் படுகிறது. தற்போது அணு கடிகாரத்தை பின்பற்றியே உலகின் நேரம் நிர்ணயிக்கப் படுகிறது.
பூமியின் ஒருநாள் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் நேரம் வானியல் நேரம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக பூமி எப்பொழுதும் ஒரே வேகத்தில் சுற்றுவது இல்லை.
நிலவின் ஈர்ப்பு விசை, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில நேரங்களில் வேகமாகவும் சில நேரங்களில் மெதுவாகவும் சுற்றுகிறது.
இதனால் பூமியின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட வானியல் நேரத்துக்கும் அணு கடிகாரத்தின் நேரத்துக்கும் வேறுபாடு இருந்து கொண்டே இருக்கிறது.
அதன்படி 500 முதல் 750 நாட்கள் கால அளவில் வானியல் நேரத்துக்கும் அணு கடிகார நேரத்துக்கும் இடையே ஒரு விநாடி வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
எனவே வரும் 2017 புத்தாண்டு பிறக்க கூடுதலாக ஒரு விநாடி நேரமாகும்.
இந்நிலையில் குழப்பத்தை தவிர்க்க கூகுளின் சர்வர் கடிகாரம் ஒரு விநாடியை ஈடுகட்ட 20 மணி நேரம் சற்று மெதுவாகச் சுற்றும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குழப்பத்தை தவிர்க்க கூகுளின் சர்வர் கடிகாரம் ஒரு விநாடியை ஈடுகட்ட 20 மணி நேரம் சற்று மெதுவாகச் சுற்றும் என்று தெரிவித்துள்ளது.