நியூயார்க் நகரின் குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் 18 காரட் தங்கத்திலான கழிப்பறை திறக்கப்பட்டு பொது மக்களின் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளது.
இத்தாலியக் சிற்பி மௌரிஸியோ கேட்டெலான் (வயது 55) உருவாக்கியுள்ள இந்த கழிப்பறைக்கு அமெரிக்கா என பெயர் வைக்கப் பட்டுள்ளது.
தற்போது இந்த கழிப்பறைகு கென்ஹெய்ம் அருங்காட்சி யகத்தில் பொதுமக்கள் குளியலறைகள் ஒன்றில் வைக்கப் பட்டுள்ளது.
அருங்காட்சி யகத்துக்குள் வர நுழைவுக் கட்டணம் செலுத்தும் எவரும் இந்தக் கழிப்பறையை அவர்கள் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இதை வடிவமைத்த கேட்டெலான் போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பால் விண்கல் ஒன்றால் தாக்கப்பட்டு விழுவது போன்ற
ஒரு காட்சியைக் காட்டும் லா நோனா ஒரா போன்ற சர்ச்சைக்குரிய சிற்பங்களை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments