முதல்வர் ஜெயலலிதா வின் உடல்நிலை கவலைக் கிடமாக உள்ள நிலை யில் தமிழகத் தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இரண்டு புதிய ஐ.ஜி.க்கள் நியமிக்கப் பட்டுள்ள னர்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப் பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனு மதிக்கப் பட்டார். உடல் நலம் தேறி வந்த அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்ட தால் நிலைமை மோச மானது.
இந்நிலை யில் ஜெயலலிதா வின் நிலைமை மிகவும் கவலைக் கிடமாக உள்ளதாக அப்பல்லோ மருத்துவ மனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளி யிட்டது.
ஜெயலலிதா வின் நிலைமை மிக மிக கவலைக் கிடமாக உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல் அறிக்கை வெளி யிட்டுள்ளார். ஜெயலலிதா வின் நிலைமை காரணமாக தமிழக த்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
இந்நிலை யில் சாரங்கன், ஜெயராமன் என 2 புதிய ஐ.ஜி.க்கள் இன்று நியமிக்கப் பட்டுள்ளனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவே இந்த நடவடிக்கை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.