பெங்களூருவில் ரூ.5.7 கோடி புதிய ரூ2,000 நோட்டுகள் பறிமுதல் செய்யப் பட்ட விவகாரத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர். இதில் ஒருவர் முதல்வர் சித்தராமை யாவுக்கு நெருக்கமான அதிகாரியாகும்.
பெங்களூ ரில் ஐடி அதிகாரி கள் சில ஐஏஎஸ் அதிகாரிகள் வீடுகளில் கடந்த சில நாட்களாக ரெய்டு நடத்தினர். அப்போது, காவிரி நீர்ப்பாசன வாரிய செயல் இயக்குநர் சிக்கராயப்பா மற்றும்
மாநில நெடுஞ் சாலை வளர்ச்சி திட்ட அதிகாரி ஜயச்சந்திரா ஆகியோருக்கு சொந்த மான இடங்களில் இருந்து, 6 கோடி பணம், 7 கிலோ தங்க கட்டி, 7 கிலோ தங்க நகைகள், ரூ.20 கோடி மதிப்புள்ள லம்போகினி கார் ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டிருந்தன.
மேலும், ரூ.5.7 கோடி புதிய ரூ2,000 நோட்டு கட்டுக்களும் பறிமுதல் செய்யப் பட்டது அதிர்ச்சி யளித்தது.
இதில் சிக்கராயப்பா, சித்தராமை யாவுக்கு வேண்டப் பட்டவர். பாலிய காலத்து நண்பர் என கூறப்படுகிறது. அதே போல ஜெயச்சந்திரா, கர்நாடக பொதுப்பணித் துறை அமைச்சர் மகாதேவப்பாவுக்கு நெருக்கமான அதிகாரி யாம்.
இதனால் இந்த ஊழலில் கர்நாட காவை ஆளும் காங்கிரஸ் பிரமுகர் களுக்கு தொடர்பி ருக்கலாம் என சர்ச்சை எழுந்தது. இதனிடையே அதிகாரிகள் இரு வரையும், கர்நாடக அரசு இன்று சஸ்பெண்ட் செய்து உத்தர விட்டது.
Thanks for Your Comments