நடிகை விஜயசாந்தியை அ.தி.மு.க.,வில் சேர்க்க திட்டமா !

1 minute read
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் தோட்ட இல்லத்திற்கு, சினிமாவில் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தி வந்த, தெலுங்கு நடிகை விஜயசாந்தி வந்தார்.
நடிகை விஜயசாந்தியை அ.தி.மு.க.,வில் சேர்க்க திட்டமா !
அ.தி.மு.க.,வை, எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா போன்றோர் சினிமா மூலம் பிரபலம் அடைந்தவர்கள் வளர்த்த கட்சி என்பதை யாரும் மறுக்க முடியாது. 

தற்போது அ.தி.மு.க., தலைமைக்கு சினிமா துறை பங்கு வெற்றிடமாக அமைந்துள்ளது. தற்போது ஜெ.,இருந்த இடத்தில் யாரை கொண்டு வருவது என்பது விவாதத்தில் உள்ளது. 

சசிகலா மக்கள் செல்வாக்கு இல்லாதவர் கட்சியினருக்கு மட்டுமே அறிமுகம் ஆனவர். அவரை தொண்டர்கள் பொதுமக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள்.

இந்நிலையில் தெலுங்கு நடிகை விஜயசாந்தி வருகை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. 
விஜயசாந்தியை கட்சியில் சேர்த்து சினிமா துறையின் வெற்றிடத்தை நிரப்ப சசிகலா முயற்சி செய்யவுள்ளதாக அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தனர்.

அதே வேளையில், ஜெ.,மரணத்தின் போது விஜயசாந்தி அஞ்சலி செலுத்த வரவில்லை. அதனால், இன்று சசிகலாவை சந்தித்து துக்கம் விசாரிக்க வந்தார். 

இதில் அரசியல் ஒன்றும் இல்லை என போயஸ் வட்டாரம் தெரிவித்தது.
Tags:
Privacy and cookie settings