முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை மிக மிக மோசமான நிலையில் உள்ளதாக அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து தொடர்ந்து ஆட்சி அதிகாரம்
மற்றும் அதிமுக நிர்வாகத்தில் அடுத்த கட்ட மாறுதல்களை மேற் கொள்ளும் நடவடிக்கைகள் தீவிர மடைந்து வருகின்றன.
இன்று காலையில் அப்பல்லோ மருத்துவ மனையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது.
ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், தலைமைக்கு கட்டுப் பட்டு, ஒற்றுமை யாகச் செயல்படுவோம் என முடிவு எடுத்தனர்.
யார் அந்த தலைமை?
அதிமுக வைப் பொறுத்த வரை இத்தனை காலமும் தலைமை என்றால் ஜெயலலிதா மட்டும் தான். வேறு யாரும் கிடையாது. இப்போது அந்தத் தலைமை மிக மிக மோசமான நிலையில்.
அவருடைய இடத்தில் இப்போது பெயர் குறிப்பிடாமல் ஒரு பெண் மணியை முன்னிறுத் தியுள்ளார்கள்.
இந்த பெண் மணியை அனைத்து எம்எல்ஏக் களும் ஏற்றுக் கொண்டு, அவரது உத்தரவுக்கு கட்டுப் படுவதாக வாக்கும் அளித்துள்ளனர். அந்தப் பெண்மணி தான் ஜெயலலிதா வின் நெருங்கிய தோழி சசிகலா.
ஆனால் கட்சியிலோ ஆட்சியிலோ அவர் வெளிப் படையாக எந்தப் பொறுப்பிலும் இல்லாததால் அவர் பெயரில் எந்த நடவடிக் கையும் மேற்கொள்ள முடிய வில்லை.
எனவே இன்று மாலை அதிமுக தலைமை அலுவலக த்தில் நடக்கும் எம்எல்ஏக் கள் கூட்டத் தில் சசிகலாவை அதிமுக வின் பொதுச் செயலா ளராக அறிவிக்க விருப்பதாக செய்திகள் கசிந்தன.
இதற்காக சசிகலா வின் ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர் களும் - நடராஜன் உள்பட- அப்பல்லோ மருத்துவ மனையில் குவிந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அனைத்து அதிமுக எம்எல்ஏக் களுடனும் பேசி ஒருங்கி ணைத்து வந்தனர். கட்சியின் 136 எம்எல்ஏக் களிடமும் எக்காரணம் கொண்டும் கட்சி மாற மாட்டோம், அதிமுக எம்எல்ஏக் கள் கூட்டத்தில் எடுக்கப் படும்
அனைத்து முடிவுக ளுக்கும் கட்டுப் படுவோம் என பத்திரத்தில் எழுதி வாங்கியி ருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக் கின்றன.
எம்எல்ஏக் களை சென்னை யிலேயே தங்க வைத்து கவனித்துக் கொள்ள பெரிய டீம் ஒன்றே நியமிக்கப் பட்டுள்ளதாம்.
முதல்வர் குறித்த வதந்தி
இந்த சூழலில் முதல்வர் ஜெயலலிதா மறைந்து விட்டார் என்று சில ஊடகங் களில் செய்தி பரவியது. பின்னர் அப்பல்லோ நிர்வாகம் இந்த செய்தியை மறுத் துள்ளது.
இந்த பரபரப்புச் சூழ்நிலை காரணமாக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க விருப்பதை உறுதி செய்துள்ளது
அதிமுக தலைமைக் கழகம். இந்தக் கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலா ளராகத் தேர்வு செய் வார்கள் எனத் தெரிகிறது.
Tags: