தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டார்.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்காக எய்ம்ஸ் மருத்துவ மனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு இன்று சென்னைக்கு வந்தனர்.
பின்னர் அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு அவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுவினர் மருத்துவ மனையில் வெளியேறினர்.
இதனிடையே அப்பல்லோ மருத்துவமனை சுற்றி 2000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். அப்பல்லோ மருத்துவ மனையில் இருந்து போயஸ் கார்டன் வரை போக்குவரத்து நிறுத்தப் பட்டுள்ளன.
முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திலும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்னர்.
முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திலும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்னர்.