அப்பல்லோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் !

0
சென்னை அப்பல்லோ மருத்துவ மனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. தொலை பேசியில் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து ள்ளார். 
மிரட்டலை அடுத்து அப்பல்லோ மருத்துவ மனையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட் டுள்ளனர். 
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். 

75 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின்னர், இதய முடக்கம் ஏற்பட்டு டிசம்பர் 5ம் தேதியன்று மரண மடைந்தார். இதே போல் அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த பத்திரிகையாளர் சோ நேற்று மரண மடைந்தார். 

அப்பல்லோ மருத்துவமனை பற்றி சமூக வலைத் தளங்களில் பல தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று அப்பல்லோவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவ மனைக்கு தொண்டர் களால் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சியே, அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி களை இடம் மாற்றம் செய்தனர். 

இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவ மனைக்கு இன்று மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அந்த மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கிரீம்ஸ் சாலையில் இயங்கி வரும் அப்பல்லோ மருத்துவ மனைக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி, மர்ம நபர் ஒருவர், போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்தார். 

இது குறித்து ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் மருத்துவ மனையின் மேலாளர் புகார் செய்தார்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மர்மநபர், பெங்களூரில் இருந்து மிரட்டல் விடுத்தது தெரிந்தது. அந்த நபர் செக்யூரிட்டியாக வேலை செய்தவர் என்பது தெரிய வந்தது. 

5 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் அப்பல்லோ மருத்துவ மனைக்கு வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத் தக்கது. இந்த மிரட்டலை விடுத்த மர்ம மனிதர் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

A phone call from an anonymous person to the apollo hospital saying that a bomb police.when a Bomb Detection and Disposal Squad along with police dogs rushed to the spot.
சென்னை அப்பல்லோ மருத்துவ மனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. தொலைபேசியில் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். 

மிரட்டலை அடுத்து அப்பல்லோ மருத்துவ மனையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு ள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings