தொழில் வழங்கு நர்களுக்கு 6,000 கட்டார் ரியால் (1,650 அமெ. டொலர்) அபராதம் விதிக்கப்படும் என்று கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவ்வாறு உரிய நேரத்திற்கு சம்பளம் பெறாத ஊழியர்கள் உடனடியாக தத்தமது தொழில் வழங்கு நர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யலாம் என்று
கட்டார் தொழிலாளர் ஆய்வுத் திணைக் களத்தின் தலைவர் மொஹம்மட் அலி அல் மீர் தெரிவித் துள்ளார்.
கட்டார் வர்த்தக துறையில் பணியாற்றும் வெளிநாட்டு பணியாளர் களுக்கான மாதாந்த சம்பளத்தை உரிய நேரத்தில் வழங்குவதை
இவ்வாண்டு இறுதிக்குள் உறுதி படுத்து வதற்கான தொழிலாளர் மறுசீரமைப்பு அறிமுகப் படுத்தப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தி யுள்ளது.
அந்நாட்டில் சம்பள பாதுகாப்பு முறை (Wage Protection System- WPS) அறிமுகப் படுத்தப்பட்டு ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப் பட்டுள்ளது.
கட்டாரில் 1.8 மில்லியன் வெளி நாட்டவர் களில் 85 வீதமான வர்களுக்கு இலத்திரனியல் முறையில சம்பளம் வழங்கப் படுகிறது. இம்முறை யானது சுமார் 37,000 கம்பனிகளில் நடை முறைப்படுத்தப் படுகிறது.
இந்த வருட இறுதிக்குள் அத்தொகையை நூறு வீதமாக உயர்த்துவதே எமது நோக்கம் என்று கட்டார் தொழிலாளர் ஆய்வுத் திணைக் களத்தின் தலைவர் மொஹம்மட் அலி அல் மீர் தெரிவித்துள்ளார்.
மிகுதியுள்ள 15 சதவீதத்தினர் தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.
கடந்த 2013 ஆம் ஆண்டில் நடத்தப் பட்ட ஆய்வுகளின் படி கட்டாரில் சம்பளம் வழங்குவதில் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டன.
இங்கு பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்க ளில் ஐவருக்கு ஒழுங்காக நேரத்திற்கு சம்பளம் வழங்கப்படுவ தில்லை.
கடந்த 12 மாதங்களில் வெளிநாட்டு ஊழியர் களுக்கு ஒழுங்காக சம்பளம் வழங்காமல் தொழிலாளர் சட்டத்தை மீறியமை தொடர்பான
385 முறைப் பாடுகள் கிடைத்துள்ளன என்று தொழிலாளர் ஆய்வுத் திணைக்களம் சுட்டிக் காட்டியுள்ளது.
அதேபோல், கடந்த செப்டெம்பர் மாதம் மின்பொருள் நிறுவன மொன்றில் பணியாற்றிய 400 புலம்பெயர் தொழிலாளர் களுக்கான
4 மாதங்கள் சம்பளம் வழங்காமைத் தொடர்பான முறைப்பாடு கிடைத்தது எனறும் அத்திணைக் களம் சுட்டிக் காட்டியுள்ளது.
எதிர்வரும 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள காற்பந்து போட்டிக்காக மேற் கொள்ளப்படும் ஏற்பாடுகளில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளரின் உரிமைகள்
பலவகை யிலும் மீறப் படுவதாக வெளியான குற்ற சாட்டுக் களை யடுத்த அந்நாட்டு அரசாங்கம் வெளிநாட்டு தொழிலாளரின் நலன் தொடர்பில் கூடிய கவனம் எடுத்துள்ளமை குறிப்பிடத் தக்கது
Thanks for Your Comments