அத்தையைப் பார்க்க முடியவில்லை... ஜெ. அண்ணன் மகள் !

முதல்வர் ஜெயலலிதா விற்கு மாரடைப்பு ஏற்பட்டதை இதய வியல் நிபுணர்கள், நுரையீரல் சிகிச்சை பிரிவு நிபுணர்கள் தொடர்ந்து கண்காணி ப்பதாக அப்பல்லோ அறிக்கை வெளி யிட்டுள்ளது. 
அத்தையைப் பார்க்க முடியவில்லை... ஜெ. அண்ணன் மகள் !
அப்பல்லோ மருத்துவ மனையில், 74 நாட்களாக, சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா வை டாக்டர்கள் தீவிரமாக கண் காணித்து வருகின்றனர். 

மாலை முதலே அப்பல்லோ மருத்துவ மனை பரபரப் படைந்தது. அமைச்சர்கள், உயரதிகாரிகள் அப்பல்லோ மருத்துவ மனைக்கு வந்தனர். 

முதல்வருக்கு இதய முடக்கம் ஏற்பட்ட தாகவும், இதயவியல் நிபுணர்கள், நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளிப்ப தாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளது

முதல்வருக்கு, பேஸ்மேக்கர் கருவி பொருத்தப் படலாம், எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தமிழகம் முழுவதும், அனைத்து போலீஸ் நிலையங் களும் உஷார் படுத்தப்பட் டுள்ளன. போலீசார் அனைவரும், பணிக்கு வர உத்தர விடப்பட் டுள்ளனர்.

சென்னை யில் உள்ள அமெரிக்க துணை துாதரகத் திற்கு, முழு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. நேற்று இரவே, சென்னை யில் பெரும் பாலான பெட்ரோல் பங்க்குகள் மூடப் பட்டன. 
கடைகளை இன்று திறக்க வேண்டாம்' என, வணிகர் சங்கங் களுக்கு, போலீசார் வாய்மொழி உத்தரவு பிறப்பித் துள்ளனர். 

சட்டம் - ஒழுங்கு பிரச்னையை சமாளிக்க, மாநிலம் முழுவதும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர். 

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து தகவல் அறிந்த உடன் ஏராளமான அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மருத்துவ மனை வாசல் முன்பு குவிந்தனர். 

ஜெயலலிதா வின் அண்ணன் மகள் தீபா உடனடியாக அப்பல்லோ மருத்துவ மனை வாசலுக்கு வந்தார். ஆனால் அவர் கேட்டிற்கு வெளியே தடுத்து நிறுத்தப் பட்டார்.

இதனை யடுத்து செய்தியா ளர்களிடம் பேசிய தீபா, காவல் துறையினர் தன்னை இங்கிருந்து போகுமாறு கூறுவதாக குற்றம் சாட்டினார். யார் சொல்லி தன்னை போலீஸார் துரத்து கிறார்கள் என்றும் தீபா கேள்வி எழுப்பினார். 
அத்தை ஜெயலலி தாவைப் பார்க்க தனக்கு முழு உரிமை உள்ள தாகவும், ஆனால் தன்னை அனுமதிக்க மறுக்கி ன்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். 

கடந்த சில வாரங் களுக்கு முன்பு அவர் அப்பல்லோ விற்கு வந்த போதும் அவர் அனுமதிக்கப் படவில்லை, தடுத்து நிறுத்தப் பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings