திமுகவில் இருந்து விரட்டப்பட இருந்த நேரத்தில் தானாக விலகிய குஷ்பூ தற்போது காங்கிரசில் உள்ளார். திமுகவில் இருந்த போது, மு.க. ஸ்டாலினை தேவையி ல்லாமல் விமர்சித்து வீடு தாக்கப்பட காரணமாகி இருந்தார்.
தற்போது காங்கிரசில் இருந் தாலும் நாத்திகம் பேசி வருவ தோடு காங்கிர சின் மதச்சார் பற்ற கொள்கை க்கு எதிராகவும் பேசி யுள்ளார்.
முஸ்லீம்களின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்து, தலாக் விவகார த்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப் பாட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்தார்.
இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக காங்கிரசார் மேலிடத்திற்கு புகார் களை அனுப்பி வருகின்றனர். இதனால் விரைவில் அவர் மீது கடும் நடவடிக்கை பாயும் என எதிர் பார்க்கப் படுகிறது.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அவர் காங்கிரசில் இருந்து விலகவும் நேரலாம் என கூறப்படுகிறது. நான் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்தவள் என ஏற்கனவே குஷ்பூ கூறியிருந்தார்.
இதனிடையே குஷ்புவின் கருத்தை பா.ஜ.க. தலைவர்கள் பாராட்டி யுள்ளதால், அவர் பா.ஜ.க விற்கு போகத்தான் வாய்ப்பு அதிகம் என வலை தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
ஏற்கனவே நடிகை கவுதமி பிரதமர் மோடியை சந்தித்து வந்துள்ள தால், அவருடைய பெயருடன் சேர்த்து இப்போது குஷ்புவின் பெயரும் அடிபடத் தொடங்கியுள்ளது.