ஜூஸ் குடிப்பதற்கு முன்னால் |

2 minute read
சிலருக்கு பழங்களாக சாப்பிடுவதை விட ஜூஸாக குடிக்க மிகப் பிடிக்கும். பொதுவாக நார்ச்சத்து பழங்களை அப்படியே சாப்பிடும் போது முழுவதும் கிடைத்து விடும். 
ஜூஸ் குடிப்பதற்கு முன்னால் |
ஆனால் ஜூஸாக குடிக்கும் போது நார்சத்து குறைந்து விடும். அதிக உடல் உழைப்பு, விளையாட்டு விளையாடு பவர்கள், பழங்களை ஜூஸாக குடிப்பது நன்மைகள் தரும். 

இவை நீரிழப்பை சமன் செய்துவிடும். ஆகவே ஜூஸா குடிப்பதும் நல்லது தான். ஆனால் பழச் சாறுகளை குடிப்பதற்கு முன் சில விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். அவை என்னென்ன என்று பார்ப்போமா?
கடைகளில் ஜூஸ் குடிக்கலாமா?

மிக முக்கியமான விஷயம் என்ன வென்றால் கடைகளில் பழச்சாறுகள் குடிப்பது தொற்று நோய்களுக்கு வழிவகுக்கும். அவர்கள் ஜார்களை சரியாக கழுவாமல் அப்படியே நாள் முழுவதும் உபயோகிப்பார்கள்.

பழங்களால் எளிதில் பேக்டீரியா போன்ற நுண் கிருமிகள் உற்பத்தியாகி விடும். ஆரோக்கிய மானது என நினைத்தால் அவை வயிற்றுப் பிரச்சனை களை உருவாக்கும். முடிந்த வரை வீட்டிலேயே குடிப்பது நல்லது.

அப்படியே தவிர்க்க முடியா விட்டாலும் ஜார்களை நன்றாக கழுவி உபயோகிக்கி றார்களா என பார்க்கவும்.

சர்க்கரை உபயோகிக்க கூடாது :

சர்க்கரை உபயோகித்து ஜூஸ் குடிப்பதையே பெரும்பாலோனோர் வழக்கத்தில் வைத்திருக்கிறோம். ஆனால் அது நல்லதல்ல. இது உடல் எடையை கணிசமாக கூட்டி விடும். 
ஜூஸ் குடிப்பதற்கு முன்னால் |
ஏனென்றால் பழங்களிலேயே தேவையான அளவு சுக்ரோஸ் இருக்கிறது. 

இதில் கூடுதலாக நாம் சர்க்கரையை சேர்க்கும் போது அதன் முழு நன்மைகளும் கிடைக்காமல், கலோரியை அதிகரித்து விடுகிறோம். ஆகவே சர்க்கரையை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

ஸ்டோர் செய்யக் கூடாது :

அப்போது தயாரித்து அப்போதே குடித்து விட வேண்டும். இதனால் முழு சத்துக்களும் கிடைக்கும். ஃபிர்ட்ஜில் வைப்பதால் சில நுண் சத்துக்கல் அழிந்து விடுகின்றன. ஆகவெ எந்த பழச் சாறையும் ஃப்ரஷாக குடித்து விடுங்கள்.
மில்க் ஷேக் குடிக்கலாமா?

எல்லா வித பழங்களிலும் பால் கலந்து மில்க் ஷேக் குடிக்கிறார்கள். இது தவறு. பாலில் எலுமிச்சை கலந்தால் என்னாகும்.திரிந்து விடும் தானே? அப்படிதான் சிலவகை பழங்கள். 
ஜூஸ் குடிப்பதற்கு முன்னால் |
மிகவும் இனிப்பான பழுத்த பழங்களுடன் பால் கலந்து ஜூஸ் தயாரி க்கலாம். மாம்பழம், ஆப்பிள் போன்ற வற்றில் குடிக்கலாம். ஆனால் திராட்சை, ஆரஞ்சு, மாதுளை போன்ற வற்றில் குடிக்கக் கூடாது. 

ஸ்ட்ரா பெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் இனிப்பாக இருந்தாலும் அவற்றில் புளிப்பு சுவையும் உள்ளது. ஆகவே ஸ்ட்ரா பெர்ரி, அன்னாசி ஆகியவை பாலுடன் கலந்து குடிக்கக் கூடாது.
பழங்களை கழுவ வேண்டும் :

எந்த வித பழச்சாறு உபயோகித் தாலும், பழங்களை நன்றாக கழுவி விட்டே உபயோகிக்க வேண்டும். ஏனென்றால் பச்சை காய் மற்றும் பழங்களின் மேல் சால்மோ னெல்லா போன்ற 
ஜூஸ் குடிப்பதற்கு முன்னால் |
உடலுக்கு நச்சு விளை விக்கும் பேக்டீரியாக்கள் உற்பத்தியாகும். ஆகவே பழங்களை நன்றாக கழுவிய பின்னே உபயோகப் படுத்த வேண்டும்.

காய்கறி ஜூஸ் குடிக்கும் போது :

காய்கறி ஜூஸ் குடிக்கும் போது எல்லா காய்களையும் அப்படியே பச்சையாக ஜூஸ் தயாரிக்கக் கூடாது. சில காய்களை வேக வைத்த பின்னே ஜூஸ் தயாரிக்க வேண்டும். 
ஜூஸ் குடிப்பதற்கு முன்னால் |
புருக்கோலி, காலிஃப்ளவர் ஆகியவை வேக வைத்த பின்னே ஜூஸ் தயாரிக்கலாம். தக்காளி, கேரட், வெள்ளரி ஆகியவற்றை அப்படியே தயாரிக்கலாம்.
Tags:
Today | 4, April 2025
Privacy and cookie settings